Skip to main content

Posts

Showing posts from August, 2024

திரிவெடி 22

  திரிவெடி 22 (31/08/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   புதன், வெள்ளி, திங்கள், செவ்வாய், வியாழன் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4307

   நேற்று காலை வெளியான வெடி   போரின்றி போட்டார் சேனை இடையில் உடுத்துவதற்கு உயர்ந்தது (4) அதற்கான விடை : பட்டாடை = படை + போட்டார் ‍-போர்   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

திரிவெடி 21 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   வேழம், திருமால், முழுமை,  மாவிலை,  சங்கு   வேழம் = வாரணம் திருமால் = நாரணன் முழுமை = பூரணம் மாவிலை = தோரணம் (??) இந்த நான்கும் முதல் சொற்களாக‌ எதுகையாக ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடலொன்றின் நான்குவரிகளில் உள்ளன. கிட்டதட்ட இரண்டுமாதத்தில்  புது இசைவடிவில் வெளியானதிலிருந்து நூறுமுறைக்கு மேல் இப்பாடலைக் கேட்டுவிட்டேன்/பார்த்துவிட்டேன். அது  ஒலித்துக்கொண்டிருக்கும்போது செய்த வெடி. வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.     அதனால் இவற்றோட ஒட்டாத சொல் சங்கு. ஆனாலும் இப்பபாடலை முழுதாகப் படித்தால் ஆண்டாள் வெண்சங்கிடம் என்ன கேட்கிறாள் என்று அறிந்து அதன் சூட்சுமத்தைப் புரிந்தால் வியந்துபோவீர்கள். இங்கே இசையாகக் கேட்கலாம். இங்கே பரத‌நாட்டியத்துடன் காணலாம்.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

உதிரிவெடி 4307

    உதிரிவெடி 4307 ( ஆகஸ்டு 18 , 2024) வாஞ்சிநாதன் ************************    போரின்றி போட்டார் சேனை இடையில் உடுத்துவதற்கு உயர்ந்தது (4)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்    

திரிவெடி 21

  திரிவெடி 21 (17/08/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  வேழம், திருமால், முழுமை,  மாவிலை,  சங்கு இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.  

விடை 4306

     நேற்றைய வெடி: கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5) அதற்கான விடை:    வல்லினம் = வல்லி + னம் வல்லி = கொடி (புஷ்பலதா = புஷ்பவல்லி = மலர்க்கொடி)  னம்  = மானம் ‍- மா  (மா = பெருமை)  கடினமான இப்புதிருக்கு விடையளித்த அனைவருக்கும் பாராட்டுகள். பிரசாத் வேணுபோபால் விடையோடு வெண்பாவை எழுதியுள்ளார். அதனால் நானும் ஒன்று எழுதுகிறேன்: பகட்டான சொல்லழகைப் பார்த்துநீர் தந்த‌ திகட்டா விடையின் சிறப்பை  நுகர்ந்து கொடியேந்திப் பாராட்டிச் சொல்வேன் உதிரி வெடியில்நீர் வேந்தரென நின்று.   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 440

   Solution to Krypton 438  Yesterday's clue A weapon to tear apart a  shelter and liberate (3) Solution: RID =   TRIDENT - TENT Trident  = a weapon TENT  =  shelter rid (verb) =  Liberate Visit this page to see all the solutions received.

Krypton 440

    Krypton 440 (11th August  2024)  ******************     A weapon to tear apart a  shelter and liberate (3)  SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 20 விடைகள்

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்: சந்தானம், விஜய், ஜெயம், கஜம், ஆதி     என்னுடைய கணிப்பில் சேராதது, ஜெயம் . அஷ்ட லக்ஷ்மிகளில் நான்கை மற்ற சொற்கள் குறிக்கும்: "சந்தான லக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆதி லக்ஷ்மி". விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 20

  திரிவெடி 20 (10/08/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   சந்தானம், விஜய், ஜெயம், கஜம், ஆதி உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

Solution to Krypton 439

   Yesterday's clue: Fleeting sign of initial times  Madonna carried (9) Its solution:  MOMENTARY =   MARY + OMEN + T Mary  =  Madonna OMEN = sign T = initial times Visit this page to see all the solutions received.

விடை 4305

   நேற்று காலை வெளியான வெடி உடுத்திய பின்னர் கடைசி நிமிடம் வருவோரைப் பற்றிய முன்னறிவிப்பு (5) அதற்கான விடை :  கட்டியம் = கட்டிய + ம் கட்டிய = உடுத்திய‌ ம் = கடைசி நிமிடம்   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.    திரிவெடி 19ல் உத்தரப்பிரதேசம்தான் சரி, உத்திரப் பிரதேசம் சரியல்ல என்று குணசேகரன் கருத்துரையில் கூறியுள்ளார்.  ஹிந்தி உச்சரிப்பின் படி கூறுகிறார்.  எது சரியென்று நான் அறிய முற்படவில்லை.  "உத்தர்" என்று இப்போது நான் கண்டு பிடித்தேன். "ர்",  என்பது   ர ஆவதும் "த" என்பது "தி" என்று ஆனதும் தமிழ்சொல் போல் ஒலிக்கிறது. சாவித்ரி/சாவித்திரி, பத்ரிகை/பத்திரிகை, த்ராக்ஷை/திராட்சை என்று தமிழ்ப்படுத்தும் பொதுவான விதி இருப்பதால் இது பரவலாகிவிட்டது என்று நினைக்கிறேன்.  

உதிரிவெடி 4305

    உதிரிவெடி 4305 ( ஆகஸ்டு 4 , 2024) வாஞ்சிநாதன் ************************ உடுத்திய பின்னர் கடைசி நிமிடம் வருவோரைப் பற்றிய முன்னறிவிப்பு (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 19 விடைகள்

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:     புத்தி, திரிபு, உத்தி, மத்தி, அருணா    திரிபு உத்தி, மத்தி, அருணா இவை நான்கும் சொல்லாகவோ பெயராகவோ இருந்தாலும், அவை  மாநிலங்களின் பெயர்களின் முதல் மூன்று எழுத்துகள் கூட: திரிபுரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் அருணாசலம் இவ்விடையைச் சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், ஆர் பத்மா, வானதி  இருவருக்கும்   மூவருக்கும் பாராட்டுகள். "திரிபு" மட்டும் தமிழ்ச் சொல் மற்றவை சமஸ்கிருதம் (அம்பிகா) "அருணா"வில் மட்டும் "தி" என்ற எழுத்து இல்லை (முத்துசுப்ரமணியம், அம்பிகா) என்ற விடைகளும் நான்  எதிர்பார்க்காத  ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்கள் கொண்ட விடைகள். இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 19

  திரிவெடி 19 (03/08/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன. புத்தி, திரிபு, உத்தி, மத்தி, அருணா இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.