இன்று காலை வெளியான வெடி
பழுதை நீக்கிப் பொலிவுறச் செய்து நேற்று வந்த மோகம் (6)
அதற்கான விடை: புதுப்பித்து = புதுப்பி + த்து = புது + பித்து
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
பழுதை நீக்கிப் பொலிவுறச் செய்து நேற்று வந்த மோகம் (6)
அதற்கான விடை: புதுப்பித்து = புதுப்பி + த்து = புது + பித்து
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
**********************
*வெளிநாட்டு மோகம்*
முதலில், *மோகம்* என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கலாம். சிவஞானபோதம் என்னும் நூல், மோகம் என்பது மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்கிறது. கம்பர் *மோகமெங்குமுளவாக* என்று திகைப்பு என்கிற அர்த்தத்தில் சொல்கிறார்.
மோகம் பழைய வார்த்தை.மெள்ள மெள்ள இந்தச் சொல் *_மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு_* என்று பாரதி திணறுமளவுக்கு மனதை ஆக்கிரமிக்கும் உணர்ச்சிக்கு, ஆங்கிலத்தில் Obsession என்று சொல்கிறார்களே… அதற்கு ஈடாகப் பயன்படும் வார்த்தையாகி விட்டது. இந்தக் கோணத்தில் தான் நாம் வெளிநாட்டு மோகத்தைப் பார்க்கப் போகிறோம்.
வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று - வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் (மேட்ச்பாக்ஸ்கூட ஃபாரின்தாங்க எங்க வீட்ல…). இரண்டு -வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகித்து, அதைக் - குருட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பது. (ராதாவுக்கு கோக் இல்லைன்னா உயிர் வாழமுடியாது). மூன்றாவது - இடது கையை வெட்டிக் கொடுத்தாவது வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம் (சியாட்டில்ல எப்ப மழை பெய்யும்னு சொல்ல முடியாது…).
[From the article
வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - by *சுஜாதா* ]
**********************
_பழுதை நீக்கிப் பொலிவுறச் செய்து நேற்று வந்த மோகம் (6)_
_பழுதை நீக்கிப் பொலிவுறச் செய்து_
= *புதுப்பித்து*
_மோகம்_ = *பித்து*
_நேற்று வந்த_ = *புது*
_நேற்று வந்த மோகம்_
= *புது பித்து*
(" நேற்று வந்தவ, புது பெண்டாட்டி ;அவ பேச்சுக்கு தலையாட்றான் "..ஒரு தாய் மகனை குறைகூறுதல். நேற்று வந்தவ = *புது* பெண்டாட்டி)
**********************
*பித்து பிடித்ததோ*
என் காகித குழந்தையை
கிறுக்கி கசக்கி வீசிகின்றேன்.!
அது தவழ்ந்து சென்று
குப்பைத்தொட்டியில்
உறங்குகிறது
எனக்கென்ன
கவிதை பித்தா.?
காதல் பித்தா.?
(பார்த்திப மணி)
**********************
_பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!_
_எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்;_ _பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்_
_அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?_
பித்தனே(பைத்தியமே), பிறையைத் தன் தலையில் கண்ணியாகச் சூடியவனே,பெருமை உடையவனே,அருளை அள்ளி வழங்குபவனே,தென்பெண்ணையாற்றின் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் (விழுப்புரம் அருகில்) கண்ணதாகிய, `அருட்டுறை’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஈசனே, எனது நெஞ்சத்துள்ளே உன்னை என்றும் நீங்காது வைத்தருளினாயே அதனால்,எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் இல்லையென்ற’ எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! என்ற ஆகச்சிறந்த தேவாரத்தில் *சுந்தரர்* அருளிய முதல் பதிக்கம்.
**********************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 28-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தனது பெரிய தலையின்றி வ.உ.சி. குழம்பியது பொருத்தமானது (6)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சாதிகள் வேண்டா
சாத்திரம் வேண்டா
சோதியாய் இறையை
சீவனில் உணர்ந்தால்
எல்லா உயிரும்
எமதுயிர் என்றால்
நில்லா வாழ்விலும்
நிலைபெறு வீரே
பசிப்பிணி போக்கிப்
பலருடன் வாழ்வோம்
*உசிதமானது* உயிரோம்பலன்றி
உலகினில் வேறிலை
என்று பேசிய ஒருவன்
ஏழைதான் ஆயினும்
வள்ளலாய் ஆனவன்
சமத்துவப் பெரியார்
இராமலிங்க அடிகளார்
வழித்தடம் விரிய
வணங்குவோம் பெரிதாய்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எழுதியவர் : நவீன் இளையா.
**********************
தோழிக்கான கவிதை....
இருக்கு ஆனால் இல்லை...
ஆம் என்று சொல்வதில்லை
குதற்கமான கேள்விகளுக்கு
இருக்கு என்று சொல்வதுண்டு
தேவைக்கு ஏற்றவாறு....
இல்லை என்பது உண்மையானல்...
இருக்கு என்பது ஊமையாகுமே...
_ஆதலால்....இருக்கு ஆனால் இல்லை என்பதே *உசிதமானது* தோழியே..._
- #தாமரை✍️
**********************
_தனது பெரிய தலையின்றி வ.உ.சி. குழம்பியது பொருத்தமானது (6)_
_பெரிய_ = *மா*
_தலையின்றி வ.உ.சி._
= *உசி*
_குழம்பியது_ = anagram indicator for *(தனது+மா+ உசி)*
= *உசிதமானது*
= _பொருத்தமானது_
**********************
திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் 1294
🌷🌷🌷🌷🌷🌷🌷
நாளு மிகுத்த ...... கசிவாகி
ஞான நிருத்த ...... மதைநாடும்
ஏழை தனக்கு ...... மநுபூதி
ராசி தழைக்க ...... அருள்வாயே
பூளை யெருக்கு ...... மதிநாக
பூண ரளித்த ...... சிறியோனே
வேளை தனக்கு ...... சிதமாக
வேழ மழைத்த ...... பெருமாளே.
*......... சொல் விளக்கம் .........*
*நாளு மிகுத்த கசிவாகி ...*
நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி
நெகிழ்ந்த மனத்தினனாய்,
*ஞான நிருத்தம் அதைநாடும்* ...
உனது நடனக் கோலத்தைக்
காண விரும்பும்
*ஏழை தனக்கும் அநுபூதி ...*
எளியோனாகிய எனக்கும் அனுபவ
ஞானம் என்னும்
*ராசி தழைக்க அருள்வாயே ...*
பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க
அருள் புரிவாயாக.
*பூளை யெருக்கு மதிநாக ...*
பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச்
சந்திரன், பாம்பு ஆகியவற்றை
*பூண ரளித்த சிறியோனே ...*
சடையிலே அணிந்துள்ள சிவபெருமான்
அளித்த குழந்தையே,
*வேளை தனக்கு உசிதமாக ...*
உனக்கு வேண்டிய சமயத்தில்
சமயோசிதமாக
*வேழ மழைத்த பெருமாளே. ...*
யானையாகக் கணபதியை
வரவழைத்த பெருமாளே.
**********************
💐🙏💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[9/28, 07:01] Ramarao திரைக்கதம்பம்: உசிதமானது
[9/28, 07:09] Viji - Kovai: 28.9.20 விடை
உசிதமானது
[9/28, 07:19] மீ.கண்ணண்.: உசிதமானது
[9/28, 07:20] N T Nathan: உசிதமானது
[9/28, 07:21] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:உசிதமானது
[9/28, 07:25] akila sridharan: உசிதமானது.
பெரிய - மா.
தலையின்றி வ உ சி - உசி.
மா+உசி+தனது = உசிதமானது =பொருத்தமானது.
[9/28, 07:29] Meenakshi: விடை:உசிதமானது
[9/28, 07:39] Bharathi: உசிதமானது
[9/28, 07:41] chithanandam: உசிதமானது
[9/28, 07:45] பாலூ மீ.: விடை : உசி தமானது.
[9/28, 07:52] prasath venugopal: உசிதமானது
[9/28, 08:00] nagarajan: *உசிதமானது*
[9/28, 08:08] Mr KB: கி.பா---- உசிதமானது
[9/28, 08:33] மாலதி: உசிதமானது
[9/28, 08:39] ஆர். நாராயணன்.: உசிதமானது
[9/28, 08:40] siddhan subramanian: உசிதமானது
[9/28, 09:43] கு.கனகசபாபதி, மும்பை: உசிதமானது
[9/28, 10:20] வானதி: உசிதமானது
[9/28, 10:22] Srikrupa: உசிதமானது
[9/28, 13:24] ஆர்.பத்மா: உசிதமானது
[9/28, 14:44] balakrishnan: உசிதமானது
[9/28, 15:36] A D வேதாந்தம்: விடை= உசிதமானது/ வேதாந்தம்
*இன்றைய உதிரிவெடி!*( 29-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
குளிக்கத் தொடங்க நீர் சுண்ட துறை தடுமாற முழுமையானது (6)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
_நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !_
_நாமிதை உணர்ந்தால்_ _நமக்கில்லை துன்பம்!_
_ஆயிரம் செல்வங்கள் சேர்த்தென்ன லாபம் !_
_நோயினில் வீழ்ந்தால் வாழ்வென்றும் சோகம் !_
( கோ. சிவமைந்தன் )
*************************
_குளிக்கத் தொடங்க நீர் சுண்ட துறை தடுமாற முழுமையானது(6)_
_குளிக்கத் தொடங்க_
= *கு*
_நீர் சுண்ட_ = *வற்ற*
_துறை_ = *துறை*
_தடுமாற_ = anagram indicator for ( *கு+வற்ற+துறை* )
= *குறைவற்றது*
= _முழுமையானது_
*************************
_*பட்டினத்தார் பாடல் கரித்துணி*_
_கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றிப்_
_பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும்_
_தரையில் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்_
_*குறைவற்ற* செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே (_ 29)
கறை இல்லாத பல்லும்
கரி நிறத் துணி ஆடையும்
கள்ளம் இன்றிப் பொறுமை கொண்ட நெஞ்சமும்
பொல்லாத ஊணவும்
ஊர்ப் புறத்தே இருக்கும் திண்ணையும்
தரையில் கிடப்பதும்
இரந்துண்ணும் ஓடும்
சகம் அறியக் குறைவு அற்ற செல்வம்
என்றே கோல மா மறை கூப்பிடுமே !
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[9/29, 07:02] Ramarao திரைக்கதம்பம்: குறைவற்றது
[9/29, 07:04] siddhan subramanian: குறைவற்றது
[9/29, 07:07] பாலூ மீ.: விடை கு றை வற்ற து
[9/29, 07:09] மீ.கண்ணண்.: குறைவற்றது
[9/29, 07:09] balakrishnan: குறைவற்றது🙏
[9/28, 08:39]ஆர்.நாராயணன். குறைவற்றது.
நேற்று உசிதமானது, இன்று குறைவற்றது
[9/29, 07:12] Meenakshi: விடை:குறைவற்றது
[9/29, 07:18] Usha Chennai: குறைவற்றது
[9/29, 07:23] prasath venugopal: குறைவற்றது
[9/29, 07:25] Viji - Kovai: 29.9.20 விடை
குறைவற்றது
[9/29, 07:28] A D வேதாந்தம்: விடை= குறைவற்றது/ வேதாந்தம்
[9/29, 07:31] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:குறைவற்றது.
[9/29, 07:43] Bharathi: குறைவற்றது
[9/29, 07:55] akila sridharan: குறைவற்றது
: 👏👏🙏
[9/29, 08:08] sankara subramaiam: குறைவற்றது
[9/29, 08:38] nagarajan: *குறைவற்றது*
[9/29, 09:19] Dr. Ramakrishna Easwaran: *குறைவற்ற*
[9/29, 09:33] பானுமதி: குறைவில்லாத
[9/29, 10:12] வானதி: குறைவற்றது
[9/29, 12:06] Srikrupa: குறைவற்றது
[9/29, 13:13] ஆர்.பத்மா: குறைவற்றது
[9/29, 14:07] chithanandam: குறைவற்றது
[9/29, 18:13] shanthi narayanan: குறைவற்றது
[9/29, 19:07] Sucharithra: குறைவற்றது
****&&&**&&&*******&&&&
*இன்றைய உதிரிவெடி!*( 30-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கத்தியைச் செருகிக் கொண்டு தழுவச் சொல்லும் இலக்கியக் கூறு (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
************************
*அகத்திணை*
பண்டைய தமிழ் இலக்கியங்கள்அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் *அகத்திணை* என்கின்றன.
தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர் தொல்காப்பியர், அகத்திணை இயலை ஏழு திணைகளாக பகுத்துள்ளார். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பனவாகும்.
*************************
_கத்தியைச் செருகிக் கொண்டு தழுவச் சொல்லும் இலக்கியக் கூறு (5)_
_தழுவ_ = *அணை*
_கத்தியைச் செருகிக் கொண்டு_ =indicator to place *கத்தி* inside *அணை*
= *அ[கத்தி]ணை*
= *அகத்திணை*
_சொல்லும்_ = _indicator for definition இலக்கியக் கூறு_
_இலக்கியக் கூறு_
= *அகத்திணை*
**********************
*திணை* என்றால் ஒழுக்கம் என்று பொருள்படும். *அகமாவது* ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தமக்குள்ளே கண்டு, காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என ஐந்துவகை அன்பு உரிப்பொருளைக் கொண்டுள்ளது. *_இவற்றைக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பர்._* இவை குறிஞ்சி, பாலை, முல்லை , நெய்தல், மருதம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.
*************
சங்க இலக்கியம் என்று அறிஞர்களால் தொகுக்கப்பட்ட நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். இவற்றுள் எட்டுத்தொகைத் தொகுப்பில் உள்ள அகநானூறு, ஐங்குறு நூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய ஐந்து நூல்களும் *அகத்திணை நூல்கள்.* பத்துப்பாட்டுத் தொகுக்கிலுள்ள குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு நூல்களும் அகத்தினை நூல்கள். இத் தொகுப்பில் உள்ள நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களையும்கூட அகத்திணை நூல்கள் என்று அறிஞர்கள் சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[9/30, 07:02] Ramarao திரைக்கதம்பம்: அகத்திணை
[9/30, 07:05] balakrishnan: அகத்திணை😄🙏
[9/30, 07:06] N T Nathan: அகத்திணை
[9/30, 07:15] பாலூ மீ.: அணை + கத்தி = விடை அகத்திணை
[9/30, 07:22] Meenakshi: விடை:அ கத்தி ணை
[9/30, 07:42] Sucharithra: உறைக்கும்
[9/30, 07:44] மீ.கண்ணண்.: அகத்திணை
[9/30, 07:54] ஆர். நாராயணன்.: {(அ)கத்தி(ணை)}
[9/30, 08:01] மாலதி: அகத்திணை
[9/30, 08:01] prasath venugopal: அகத்திணை
[9/30, 08:03] nagarajan: *அகத்திணை*
[9/30, 08:08] siddhan subramanian: அகத்திணை (அணை + கத்தி)
[9/30, 09:02] வானதி: அகத்திணை
[
[9/30, 09:25] A D வேதாந்தம்: விடை= அகத்திணை/வேதாந்தம்
[9/30, 09:34] akila sridharan: அகத்திணை
[9/30, 09:37] உஷா, கோவை: அகத்திணை
[9/30, 09:02] Dr. Ramakrishna Easwaran: *அகத்திணை*
[9/30, 09:51] கு.கனகசபாபதி, மும்பை: அகத்திணை
[9/30, 10:03] sankara subramaiam: அகத்திணை
[9/30, 10:26] sathish: அகத்திணை
[9/30, 16:32] Viji - Kovai: 30.9.20 விடை
அகத்திணை
[9/30, 18:59] ஆர்.பத்மா: அகத்திணை
************************
[9/30, 20:59] *Mr KB: அகத்திணை -------கி.பா*
*இன்றைய உதிரிவெடி!*( 01-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கோட்டைக்குப் பாதுகாப்பு அளிப்பவரை முதலில் நீக்கு (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-10-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
*அகழப்பெற்று உருவாக்கப் பெற்றது அகழி.*
அகழ்தல் என்ற சொல்லுக்கு தோண்டுதல், கல்லுதல், உழுதல், துருவுதல், அரிதல், அறுத்தல் எனப் பலவாறு பொருள் சொல்கிறது தமிழகராதி.
_அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை_
_இகழ்வார்ப் பொறுத்தல் தலை_
என்னும் குறள் “தோண்டுதல்” என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளது.
தன்னைத் தோண்டுவாரைச் சுமக்கும் நிலம் போல, தம்மை இகழ்பவர்களைப் பொறுத்தல் தலை என்பது பாடலின் பொருள்.
*****************
நகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு மன்னர்களால் கோட்டையைச் சுற்றித் தோண்டப் பெற்றுத் தண்ணீர் நிரப்பப்பெற்ற நீர் நிலைக்கு *அகழி* என்று பெயர்.பரிகம், கிடங்கு, கேணி, ஓடை என்றெல்லாம் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு.
_“அகழ் இகழ்ந்தன்ன கான் யாற்று நடவை”_ என்கிறது மலைபடுகடாம் [பாடல் வரி 214]
*************************
_கோட்டைக்குப் பாதுகாப்பு அளிப்பவரை முதலில் நீக்கு (3)_
_அளிப்பவரை முதலில்_
= _அ [ளிப்பவரை]_
= *அ*
_நீக்கு_ = *கழி*
_கோட்டைக்குப் பாதுகாப்பு_
= *அ+கழி*
= *அகழி*
**********************
நண்பர் *திரு தயானந்தன்* 24-04-20 அன்று நம் புதிராடுகளத்தில்
வெளியிட்ட புதிர்!
*******
பாபு #58:
--------------
_கோட்டையைச் சுற்றி கட்டபொம்மன் தலைமையில் புகுந்து நாசப்படுத்து (3)_
*******
கட்டபொம்மன் தலைமையில் = க
புகுந்து நாசப்படுத்து = அ(க)ழி
கோட்டையைச் சுற்றி
= விடை: *அகழி*
**********************
*கம்பராமாயணத்தில் அகழி*
_தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர்ச் செல்வன் சேயும்_
_மீனுடை *அகழி* வேலை இலங்கையர் வேந்தும், வெற்றித்_
_தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந்தலைவர் தாமும்,_
_மானுட வடிவம் கொண்டார்,வள்ளல்தன் வாய்மைதன்னால்._
(கம்பராமாயணம், யுத்த காண்டம் மீட்சிப் படலம்)
*பதவுரை*
வள்ளல் தன் வாய்மை தன்னால்- இராமபிரானது அருள்
மொழி ஆற்றலால்;
தேனுடை அலங்கல் மௌலிச்
செங்கதிர்ச் செல்வன் சேயும் - தேன் பொருந்திய
மாலைசூடிய முடியணிந்த சூரியன் மகனாய சுக்கிரீவனும்;
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும்- மீன்
பொருந்திய கடலை அகழியாக உடைய இலங்கைக்கு
அரசனாகிய வீடணனும்;
வெற்றித் தானையும்- வெற்றி பெற்ற
சேனையும்;
பிறரும் மற்றைப் படைப்பெருந்தலைவர்
தாமும்- மற்றவர்களும் ஏனைய சேனைத்தலைவர்களும்
(குரங்கு வடிவும் அரக்க வடிவும் நீங்கி);
மானுட வடிவம்
கொண்டார்- மனித வடிவு கொண்டார்கள்.
**********************
*உலகத்தில் மிகவும் ஆழமான கடல் பகுதி - மரியானா அகழி*
உலகில் உள்ள கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. அந்த இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). இது மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கில் குவாமுக்கு அருகிலும் அமைந்துள்ளது. இது ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோநேசியா ஆகிய நாடுகளின் அருகில் உள்ள கடல் பகுதியில் உள்ளது.இதன் ஆழம் 10,911 மீட்டர். அதாவது, 10.9 கிலோ மீட்டர்.
இந்த அகழியின் உள்ளே நமது இமயமலையைத் தூக்கிப் போட்டாலும், இமயமலை மூழ்கி விடும். இது அவ்வளவு ஆழம்.🤔🤔
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/1, 07:00] Ramarao திரைக்கதம்பம்: அகழி
[10/1, 07:00] மீ.கண்ணண்.: அகழி
[10/1, 07:01] Meenakshi: இன்றைய விடை:அகழி
[10/1, 07:02] V N Krishnan.: அகழி
[10/1, 07:04] chithanandam: அகழி
[10/1, 07:06] balakrishnan: அகழி. 👍🙏
[10/1, 07:20] மாலதி: அகழி
[10/1, 07:21] பாலூ மீ.: அகழி.
[10/1, 07:43] prasath venugopal: அ+கழி = அகழி
[10/1, 07:51] Mr KB: அகழி -------கி.பா
[10/1, 07:54] Venkatesan M: இன்றைய விடை = அகழி
[10/1, 07:55] கு.கனகசபாபதி, மும்பை: அகழி
[10/1, 07:56] குன்னூர் லக்ஷ்மிமணியன்: இன்றைய விடை:அகழி
[10/1, 07:59] nagarajan: *அகழி*
[10/1, 08:10] sankara subramaiam: அகழி
[10/1, 08:11] siddhan subramanian: அ + கழி = அகழி
[10/1, 08:19] ஆர். நாராயணன்.: அகழி
[10/1, 08:30] sathish: அகழி
[10/1, 08:33] உஷா, கோவை: அகழி
[10/1, 09:41] Dr. Ramakrishna Easwaran: *அகழி
[10/1, 09:59] N T Nathan: அகழி
[10/1, 07:00] stat senthil: அகளி
[10/1, 10:24] stat senthil: அகழி
[10/1, 10:44] வானதி: அகழி
[10/1, 10:45] Srikrupa: அகழி
[10/1, 11:36] shanthi narayanan: அகழி
[10/1, 15:24] A D வேதாந்தம்: விடை= அகழி/ வேதாந்தம்
[10/1, 15:54] ஆர்.பத்மா: அகழி
[10/1, 16:04] Viji - Kovai: 1.10.20 விடை
அகழி
[10/1, 20:24] Ramki Krishnan: அகழி
************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
வருந்திக் கற்றவன் மாட்டியதால் போக்கிடமில்லா நிலை (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-10-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, திசை தெரியாமல் திண்டாடும் மக்களுக்காக சொல்லப்பட்ட பழமொழி, *"திக்கற்றவருக்குத் தெய்வமே துணை"* என்பது.
வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, திசை தெரியாமல் திண்டாடும் மக்களுக்காக சொல்லப்பட்ட பழமொழி, "!.
*************************
_வருந்திக் கற்றவன் மாட்டியதால் போக்கிடமில்லா நிலை (5)_
_வருந்திக் கற்றவன் மாட்டியதால்_
= விடை வருந்திக் கற்றவன் சொற்களுக்குள் உள்ளது
= [ வருந் ]திக் கற்றவன்
= *திக்கற்றவன்*
= _போக்கிடமில்லா நிலை_
**********************
_வழிப்போக்கனாக நான்!!_
வாழ்க்கைப் பாதையில் ...
இடறி விழுந்த உனக்கு...
வழிகாட்ட வந்த வழிப் போக்கனாக நான்!!
வாடி நின்ற நீயோ...
வழிகாட்டி நீயென்றாய்!!
தேடி வந்த தெய்வமாக...
சேவைகளை செய்தாய்!!
ஆடி களைத்த என் மனமும்...
ஆறுதல் கொண்டது உன்னாலே!!
*திக்கற்றவனுக்கு தெய்வமே துணையென...*
சேர்ந்தது இருமனமும்...
சோர்ந்து நின்ற கொடிக்கு...
கொம்பாக நானும்...
வாடி கிடந்த மனதிற்கு...
அன்பு மழையாக நீயும்!!
வழித்துணை மட்டுமல்லாது...
வாழ்வின் துணையாக மனதால் ...
வாழ்வின் இறுதிவரை ...
வாழ்ந்திடுவோம் வா!!
லோசனி நாதன்
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[
[10/2, 07:00] Ramarao திரைக்கதம்பம்: திக்கற்ற
[10/2, 07:02] பானுமதி: திக்கற்ற
[10/2, 07:02] Mr KB: தி க் க ற் ற ---------கி.பா
[10/2, 07:03] sankara subramaiam: திக்கற்ற
[10/2, 07:04] Sucharithra: திக்கற்ற
[10/2, 07:05] Meenakshi: விடை:திக்கற்ற
[10/2, 07:08] பாலூ மீ.: திக்கற்ற.
[10/2, 07:08] akila sridharan: திக்கற்ற
[10/2, 07:13] ஆர்.பத்மா: திக்கற்ற
[10/2, 07:19] மீ.கண்ணண்.: திக்கற்ற
[10/2, 07:20] stat senthil: திக்கற்ற
[10/2, 07:22] Srikrupa: திக்கற்ற
[10/2, 07:23] V N Krishnan.: திக்கற்ற
[10/2, 07:26] Viji - Kovai: 2.10.20 விடை
திக்கற்ற
[10/2, 07:27] siddhan subramanian: திக்கற்றவன்
[
[10/2, 07:28] குன்னூர் லக்ஷ்மிமணியன்: திக்கற்ற
[10/2, 07:31] balakrishnan: திக்கற்ற. 🙏
[10/2, 07:36] sridharan: திக்கற்ற
[10/2, 07:50] ஆர். நாராயணன்.: திக்கற்ற
[10/2, 08:02] மாலதி: திக்கற்ற
[10/2, 08:33] nagarajan: *திக்கற்ற*
[10/2, 08:44] sathish: திக்கற்ற
[10/2, 08:45] prasath venugopal: திக்கற்ற
[10/2, 08:56] வானதி: திக்கற்ற
[10/2, 09:26] chithanandam: திக்கற்ற
[10/2, 09:52] கு.கனகசபாபதி, மும்பை: திக்கற்ற
[10/2, 11:43] shanthi narayanan: திக்கற்ற
[10/2, 14:09] Bharathi: திக்கற்ற
.
[10/2, 20:14] A D வேதாந்தம்: விடை= திக்கற்ற / வேதாந்தம்
************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஆசிரியர் இறுதியாகக் கல்லணை வந்து நொறுக்கிய அரிசி (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-10-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
_ஆசிரியர் இறுதியாகக் கல்லணை வந்து நொறுக்கிய அரிசி (3)_
_ஆசிரியர்_ = *குரு*
_இறுதியாகக் கல்லணை_
= _[கல்ல]ணை_
= *ணை*
_வந்து_ = indicator
_நொறுக்கிய அரிசி_
= *குரு+ணை*
= *குருணை*
**********************
_ஒரு கிராமத்தில் நெல்குத்திய காட்சியைக் காணவாரீர்_
*******
முறம் அல்லது சுளகைக் கொண்டு உமி, பதர், கல் போன்றனவற்றைப் பிரிப்பதில் பல வினைகள் உள்ளன. *கொழித்தல், புடைத்தல், தெள்ளுதல், நேம்புதல்* போன்ற செயல்பாடுகள் அடங்கும்
*******
”உமியும் தவிடும் நீக்கிய பின்னர் சுளகின் அடிப்பாகத்தில் தங்கியிருக்கும் அரிசியை இடதுபக்கமுள்ள இன்னொரு சாக்கில் தட்டுவார்கள். பட் பட்-என்று சுளகைத் தட்டி அனைத்து அரிசியையும் ஒன்று சேர்த்து மிக லாவகமாக அவர்கள் சாக்கில் கொட்டும் அழகே தனி. இப்படியே அடுத்தடுத்து குற்றப்பட்ட அரிசி-உமிக் கலவையை எடுத்து, உமி தவிடு நீக்கி அரிசியை எல்லாம் தனியே சேர்த்துவைப்பார்கள்.
இதற்குள் நெல்குத்திய அக்காமார் தம் வேலையை முடித்து, முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டே அத்தை பக்கத்தில் வந்து அமர்வார்கள். அவர்களுக்குச் செம்பு நிறைய தண்ணீர் கொண்டுவந்துகொடுப்பார் அம்மா. இருவரும் மடக் மடக்-என்று குடித்துச் செம்பைக் காலிசெய்வர். “அடுத்து என்ன செய்ய” என்றும் கேட்பர். “நான் பொடச்சுப்போட்ட அரிசிய நல்லா நேம்பி வையி. ஒத்தக் கல்லு இருக்கக்கூடாது" என்று ஒரு அக்காவிடம் அத்தை கூறுவார். அடுத்தவரிடம், “நீ அவ நேம்பிக்கொடுக்கறதக் கொழிச்சுப்போடு” என்பார். அப்பப்ப நாவிக்க. எல்லாக் *குருணையையும்* அந்தச் சட்டியில கொட்டிவையி. *பொடிக்குருணை* கோழிக்கு ஆகும். என்பார். நேம்புதல், கொழித்தல், நாவுதல் எல்லாம் சுளகைக் கையாளுவதில் வெவ்வேறு வழிகள். அரிசியினின்றும் கல்லைப் பிரித்தெடுக்க, *குருணை* எனப்படும் குறு நொய்யைத் தனியே பிரிக்க என்று பல்வேறு முறைகள். இறுதியில் மணிமணியாக முழு அரிசி ஒரு பக்கம், *குருணை* ஒருபக்கம், கல்லும் கழிவும் ஒருபக்கம், தவிடு ஒரு பக்கம், உமி ஒரு பக்கம் என அந்தப் பகுதியே நிறைந்துவிடும்.”
(பேரா. ப. பாண்டியராஜா)
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/3, 07:00] Ramarao திரைக்கதம்பம்: குருணை
[10/3, 07:01] sathish: குருணை
[10/3, 07:01] V N Krishnan.: குருணை
[10/3, 07:02] Meenakshi: விடை:குருணை.
[10/3, 07:03] Usha Chennai: குருணை
[10/3, 07:04] balakrishnan: குருணை. 🙏
[10/3, 07:04] Dr. Ramakrishna Easwaran: *_குருணை_*
[10/3, 07:10] மீ.கண்ணண்.: குருணை
[10/3, 07:13] Sucharithra: குருணை
[10/3, 07:14] A D வேதாந்தம்: விடை= குருணை/ வேதாந்தம்
[10/3, 07:17] Mr KB
குருணை ---------கி.பா
[10/3, 07:23] Suba: Hello sir, குருணை
[10/3, 07:26] மாலதி: குருணை
[10/3, 07:27] கு.கனகசபாபதி, மும்பை: குருணை
[10/3, 07:30] ஆர்.பத்மா: குருணை
[10/3, 07:37] ஆர். நாராயணன்.: குருணை
[10/3, 07:39] பாலூ மீ.: குருணை.
[10/3, 07:40] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:குருணை
[10/3, 07:41] akila sridharan: குருணை
[10/3, 07:52] sridharan: குருணை
[10/3, 07:55] stat senthil: குருணை
[10/3, 07:57] siddhan subramanian: குருணை
[10/3, 07:59] N T Nathan: குருணை
[10/3, 08:02] prasath venugopal: குருணை
[10/3, 08:09] Ramki Krishnan: குருணை
[10/3, 08:16] nagarajan: *குருணை*
[10/3, 08:27] chithanandam: குருணை
[10/3, 09:05] பானுமதி: குருணை
[10/3, 10:04] வானதி: குருணை
[10/3, 11:04] shanthi narayanan: குருணை
[10/3, 11:43] Viji - Kovai: 3.10.20 விடை
குருணை
[10/3, 13:12] Venkat UV: குருணை 😂
[10/3, 14:51] balagopal: தென்றல்.விடை.குருணை.
************************