Skip to main content

விடை 4105

இன்று காலை வெளியான வெடி
தோழர் சாக்கிய நாயனார் வேலை செய்து நண்பகல் தூங்கினார் இறுதியாக (4)
அதற்கான விடை: நண்பர் = நண்பகல் ‍கல் + ர்
நாயன்மாரின் ஒருவரான சாக்கிய நாயனார் குணம் போல் கல்லெறிவது (சிவலிங்கத்தை வழிபட), நண்பகல் என்பதை "நண்ப" என்று ஆக்கும். இறுதியாகத் தூங்கினார் என்பது "ர்".
போராடும் தொழிலாளர்கள் போல் கல்லெறிந்ததால் தோழர் என்று அழைக்கப்பட்டார். இந்த தோழர் செங்கொடியேந்தும் உழைக்கும் வர்க்கத்தின் நன்மதிப்பைப் பெறப்போவதில்லை. கொஞ்ச நேரம் மட்டும் வேலை செய்து பகலிலேயே தூங்கினால் தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடிய பட்டுக்கோட்டையார் எப்படி இவரை ஏற்றுக்கொள்வார்?
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*நண்பகலில் கல்லெறிய சாக்கிய நாயனரை வரழைத்த வாஞ்சியாருக்கு பாராட்டுகள்!* 💐💐
**********************
திருச்சிற்றம்பலம்
பாடல் -3636 

_அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்_

_மறு சமயச் *சாக்கியர்* தம் வடிவினால் வரும் தொண்டர்_

_உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து *கல் எறிந்து*_

_மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் 7.1.1_

அறுசமயத் தலைவர் சிவன். அவற்றில் ஒன்றான மறுசமயம் *சாக்கியம்* . (புத்தம்). இதனைப் பின்பற்றிச் சிவன்மீது கல் எறிந்தவரை வழுத்துவோம். 
**********************
_தோழர் சாக்கிய நாயனர் வேலை செய்து நண்பகல் தூங்கினார் இறுதியாக (4)_ 

_சாக்கிய நாயனர் வேலை செய்து_
= _கல் எறிந்து_

_கல் எறிந்து நண்பகல்_
= _நண்பகல்-கல்_
= *நண்ப*

_தூங்கினார் இறுதியாக_
= *ர்*

_தோழர்_ = *நண்ப+ ர்* = *நண்பர்*
**********************
*சாக்கிய நாயனர்*

சங்க-மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றிப் பிறப்பு ஒழிக்க நோன்பு இயற்றி வந்தார்.
காஞ்சி நகர் வந்து சாக்கியர் அற வழியில் பிறப்பறுக்கும் தவம் மேற்கொண்டிருந்தார்.

செய்வினை, செய்வான், பயன், பயன் கொடுப்பவன் – நான்கும் சிவனே என்று கண்டார். பௌத்த கோலம் கொண்டிருந்தாலும் சிவனை மறவாமல் இருந்தார்.

நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்டு அதன்மீது ஒரு கல்லை எறிந்துவிட்டு, அதன் பின்னர்தான் உண்பார்.
பிள்ளை என்ன செய்தாலும் கண்டு மகிழும் தந்தை போல் இவர் செயலை ஈசன் ஏற்று மகிழ்ந்தார்.

_கண்ணப்பர் செருப்புக் கால் போல் சிவனுக்கு அவர் எறிந்த கல் மலர் போல் ஆயிற்று._

ஒருநாள் கல் எறிய மறந்து உண்ணச் சென்றார். பின்னர்நினைத்துக்கொண்டு சிவன் முன் வந்தார். கல் எறிய வரும் தொண்டர் முன் சிவன் தன் துணைவியாருடன் காட்சி தந்தார்.சிவலோகத்தில்தன் பழ-அடிமைப் பாங்கினராக இருக்க அருளினார்.
**********************
💐🙏🏼💐
balakrishnan said…
அருமையான விளக்கம் வழக்கம்போல்.இந்த நாயனார் பற்றி அதிகம் அறிந்தோம்.வாழ்க வளமுடன்!
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
படுப்பதற்குத் தயார் செய்து கப்பலை ஓட்டுவர் (2, 4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_*பாயில் படு நோயை விரட்டு* ,_
_இது நமது தமிழ் பழமொழி…_
**********************
*விரித்த பாயை சுருட்ட முடியாது...*

விடுகதை
**********************
*பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்*😴

1.பொதுவாக தரையில் பாய் விரித்து நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்” எனலாம்.

2.பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது,

3.கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும்.

4.மூட்டுவலி,முதுகுவலி,தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும்.

5.பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாக தருகிறது.

6.பாய் உடல்சூட்டை உள்வாங்கக் கூடியது.

7.பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசைசாமான்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.

8.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.

9.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்
உடல் உஷ்ணம் அடைவதையும்.உடலின் வளர்ச்சியையும்.ஞாபக சக்தியையும்.
மன அமைதியையும் நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது..

தகவல் உதவி : பசுமை பாதை
**********************
_படுப்பதற்குத் தயார் செய்து கப்பலை ஓட்டுவர் (2, 4)_

_படுப்பதற்குத் தயார் செய்து_
= *பாய் விரித்து*

_கப்பலை ஓட்டுவர்_
= *பாய் விரித்து*
**********************
*பாய்மரக் கப்பல்*
1930 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில், திரு சுந்தரம் என்பவர் பாய்மரக் கப்பல் ஒன்றைக் கட்டினார். 89 அடி நீளமுள்ள இந்தப் பாய்மரக் கப்பல், வேப்ப மரத்தால் கட்டப்பட்டது. அந்தப் பாய்மரக்கப்பலின் பெயர் _' *அன்னை பூரணி அம்மாள்* '_ என்பதாகும். இந்தப் பாய்மரக் கப்பலை ALBERT ROBINSON என்ற அமெரிக்கர் பார்த்துப் பரவசப்பட்டு, அதனை விலைபேசி வாங்கினார். இந்தப் பாய்மரக் கப்பலை அமெரிக்கா கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் தமிழர்களே ஏற்றுக்கொண்டார்கள். தண்டையல் தம்பிப்பிள்ளை என்பரின் தலைமையில், மேலும் நான்கு தமிழர்கள் 'அன்னை பூரணி அம்மாள்' என்கின்ற பாய்மரக் கப்பலை 1936 ஆம் ஆண்டு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து பாய் விரித்து ஓட்ட ஆரம்பித்தார்கள். கூடவே ஒரு வெள்ளைக்கார மாலுமியையும் சேர்த்துக் கொண்டார். 1936 ஆம் ஆண்டு பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் இரண்டு ஆண்டுகள் ஆழ்கடலில் *பாய் விரித்துக்* கடலோடி 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்காவின் பொஸ்டன் துறைமுகத்தை வந்தடைந்தது. இடையில் இயற்கையின் சீற்றங்களையும், கடற்புயல்களையும் சந்தித்தபோது, வெள்ளைக்கார மாலுமி மிகவும் பயந்து போய்விட்டதையும் குறிப்புக்கள் சொல்லுகின்றன. ALBERT ROBINSON என்ற அந்த அமெரிக்கர் 'அன்னை பூரணி அம்மாள்' என்ற அந்த வேப்பமரத்துப் பாய்க்கப்பலின் பெயரை தன்னுடைய மனைவியின் பெயரான FLORANCE C. ROBINSON என்று பெயர் மாற்றம் செய்து பூரிப்படைகின்றார். வல்வெட்டித்துறை அன்னை பூரணி அம்பாள் பொஸ்டன் நகரில் FLORANCE ROBINSON ஆக மாறி விட்டாள். இந்தக் கப்பற் பயணம் குறித்து செய்தி வெளியிட்ட BOSTON GLOBE பத்திரிகை இப்படிப்பட்ட பாய்மரக் கப்பல் மேற்குச் சமுத்திரத்தைக் கடப்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கக் கூடும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
🤔👍🏼
************************
விரித்த பாயை சுருட்ட முடியாது...

விடை: *கோலம்*
************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[9/21, 07:01] Ramarao திரைக்கதம்பம்: பாய் விரித்து

[9/21, 07:03] பாலூ மீ.: விடை: பாய் விரித்து.

[9/21, 07:06] மீ.கண்ணண்.: பாய் விரித்து

[9/21, 07:19] Meenakshi: விடை.:பாய் விரித்து.

[9/21, 07:22] A D வேதாந்தம்: விடை= பாய் விரித்து / வேதாந்தம்

[9/21, 07:36] balakrishnan: 🙏 பாய் விரித்து

[9/21, 07:36] V N Krishnan.: பாய் விரித்து

[9/21, 07:37] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை : பாய் விரித்து

[9/21, 07:46] prasath venugopal: பாய் விரித்து

[9/21, 08:11] nagarajan: *பாய் விரித்து*

[9/21, 08:45] sankara subramaiam: பாய் விரித்து

[9/21, 09:09] மாலதி: பாய் விரித்து

[9/21, 09:20] ஆர். நாராயணன்.: பாய் விரித்து

[9/21, 09:49] கு.கனகசபாபதி, மும்பை: பாய் விரித்து

[9/21, 11:28] akila sridharan: பாய் விரித்து

[9/21, 17:07] Viji - Kovai: 20.9.20 விடை
பாய் விரித்து

[9/21, 19:59] N T Nathan: பாய் விரித்து
[
[9/21, 20:43] usha
பாய் விரித்து

[9/21, 20:43
கி.பா ------- பாய் விரித்து

********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 22-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
இந்நேரம் புளிக்கு ஒதுக்கப்பட்ட பொதுக்குழு இளிப்பு கலைந்தது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*இளிப்பு*

தூங்கும் என் செவிப்பறை அதிர 
அதிகாலை கத்தும் அந்தப் பறவை, 
உண்மையில் கத்தல் அல்ல; *இளிப்பு* 
என்னை நினைத்து 
என் அல்லல்களைக் கண்டு 
என்னை ஆட்டிக்குலைக்கும் புதைப்பயங்கள் மணந்தறிந்து 
என் பிழைப்பின் பஞ்சாங்கம் 
வரிவரியாய்ப் படித்தது போல் 
அதிகாலை இளிக்கத் தொடங்குகிறது அது.

இருப்பினும் ஒன்று அதற்கு தெரியாது 
நான் ஆயுள் காப்பில் பணம் கட்டி வருகிறேன். 
இறப்பின் மூலம் இருப்பவர் பெறும் 
மனிதத் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது 
அந்த இளிக்கும் பறவைக்கு.

(சுந்தர ராமசாமி)
**********************
_இந்நேரம் புளிக்கு ஒதுக்கப்பட்ட பொதுக்குழு இளிப்பு கலைந்தது (5)_

_ஒதுக்கப்பட்ட_ = indicator to delete the word _புளிக்கு_ from _பொதுக்குழு இளிப்பு_

= _பொது (க்கு) ழு இ (ளி) ப் (பு)_
= *பொதுழுஇப்*

_கலைந்தது_ = anagram indicator for *பொதுழுஇப்*
= *இப்பொழுது*

= _இந்நேரம்_
**********************
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே

தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே எங்கும்
ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே

_மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் *இளிக்கும்*_
சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே
உறுதி தந்திடுவான் இன்று எங்கும் வண்ணக்கிளியே

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே

படம்: பாவை விளக்கு (1960)
**********************
_அவகூட பேசரப்போ என்ன_
_ஈஈன்னு *இளிப்பு* உனக்கு?_
_என சண்டை போடுகிறாய்_

_சரியென சிரிக்காமல் பேசினாலோ_
_அப்படி என்ன சீரியசா பேசினே அவகூட_

_என சந்தேகத்தோடு கேட்கிறாய்_
😧😧
(நிம்மு)
**********************
💐🙏🏼💐
**********************
Posted by
*Dr. Ramakrishna Easwaran:*

Reminds me of Periazhwar Thirumozhi

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே

ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு *இப்போதே* சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
*********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[
[9/22, 07:04] Ramarao திரைக்கதம்பம்: இப்பொழுது

[9/22, 07:15] sankara subramaiam: இப்பொழுது

[9/22, 07:16] A D வேதாந்தம்: விடை= இப்பொழுது/ வேதாந்தம்.

[9/22, 07:19] balakrishnan: இப்பொழுது 🙏

[9/22, 07:23] மீ.கண்ணண்.: இப்பொழுது

[9/22, 07:24] Meenakshi: இன்றையவிடை:இப்பொழுது
[
[9/22, 07:24] chithanandam: இப்பொழுது
[
[9/22, 07:28] மாலதி: இப்பொழுது

[9/21, 07:37] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை :இப்பொழுது.

[9/22, 07:55] கு.கனகசபாபதி, மும்பை: இப்பொழுது

[9/22, 08:00] nagarajan: *இப்பொழுது*

[9/22, 08:01] V N Krishnan.: இப்பொழுது

[9/22, 08:10] Viji - Kovai: 22.9.20 விடை
இப்பொழுது

[9/22, 08:18] akila sridharan: இப்பொழுது.
பொழுதுக்கு இளிப்பு- புளிக்கு.

[9/22, 08:26] Dr. Ramakrishna Easwaran: *இப்பொழுது*
_ஒதுக்கப்பட்ட_ : deletion indicator
( _பொதுக்குழு+இளிப்பு_ ) minus ( _புளிக்கு_ )= (பொதுழுஇப்)
_கலைந்தது_ : jumble/anagram indicator
(பொதுழுஇப்)* --> *இப்பொழுது* = _இந்நேரம்_ (definition)

[9/22, 08:27] Ramki Krishnan: இப்பொழுது

[9/22, 08:39] prasath venugopal: இப்பொழுது


[9/22, 09:05] ஆர். நாராயணன்.: இப்பொழுது

[9/22, 10:15] siddhan submn: இப்பொழுது (பொதுக்குழு இளிப்பு - புளிக்கு = ) கலக்கு

[9/22, 11:26] N T Nathan: இப்பொழுது

[9/22, 12:48] வானதி: இப்பொழுது

[9/22, 12:57] Sucharithra: இப்பொழுது

[9/22, 17:02] balagopal: தற்பொழுது.

********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
விண்ணில் தொடங்கிய மழை முடிய ஆசைப்படு (2)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
நேசிக்கவும் யோசிக்கவும் ...

*மண்ணில் நடை பயின்றாலும் விண்ணில் பறப்பது தானே காதலுக்கு வாடிக்கை?*
**********************
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று

உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்றுதான்
பேரன்பால் ஒன்றாய் சேரும்
தேசம் நன்றுதான்

(படம்:காப்பான்)
**********************
_வெண் மேகம் விண்ணில் நின்று_ _கண்ணே இன்று பன்னீர் தூவும்_
_செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்_
_விடிகாலை வெள்ளி மீனே…_
_என் வாழ்வே உன்னால் தானே_

(படம்: நான் சிவப்பு மனிதன்)
********************
_விண்ணில் தொடங்கிய மழை முடிய ஆசைப்படு (2)_

_விண்ணில் தொடங்கிய_ = *வி*
_மழை முடிய_ = *ழை*
_ஆசைப்படு_
= *விழை*
**********************
_இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்_

_ஒன்னார் *விழையும்* சிறப்பு_

(குறள் எண்:630) 
பொழிப்பு (மு வரதராசன்): _ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்._
**********************
அகநானூறு 66

மக்கட்பேற்றின் சிறப்பினை,

_இம்மை உலகத்து இசையொடும் விளங்கி_
_மறுமை உலகமும் மறுவின்று எய்துப_
_செறுநரும் *விழையும்* செயிர்தீர் காட்சிச்_
_சிறுவர்ப் பயந்த செம்மலோர்_ _

என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

சொல்லியது.
செல்லூர்க் கோசிகன் 
கண்ணனார்

(இம்மை = இப்பிறவி; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலகம்; மறு = குறை; எய்துப = அடைவார்கள்;செறுநர் =பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

பகைவரும் விரும்பும் செம்மையான தோற்றம் கொண்ட சிறுவரைப் பெற்றவர்கள் ‘செம்மல்’ என்று போற்றப்படுவர். அவர்கள் இந்த உலகத்தில் புகழோடு விளங்குவது மட்டுமன்றி, மறுமை உலகிலும் குறை ஒன்றும் இல்லாமல் வாழ்வார்கள்.
**********************
💐🙏🏼💐
**********************
Posted by
*Dr. Ramakrishna Easwaran:*

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் *விழை* யும் உலகு.

(அதிகாரம்: பழைமை, குறள் 809

மு.வரதராசன் விளக்கம்:
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
**********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[9/23, 07:02] akila sridharan: விழை

[9/23, 07:02] V N Krishnan.: விழை

[9/23, 07:03] Sucharithra: விழை

[9/23, 07:03] Ramarao திரைக்கதம்பம்: விழை

[9/23, 07:03] sridharan: விழை

[9/23, 07:03] N T Nathan: விழை

[9/23, 07:04] மீ.கண்ணண்.: விழை

[9/22, 07:32] கி.பா ----- விழை
.
[9/23, 07:06] குன்னூர் லக்ஷ்மிமணியன்:
விடை:விழை

[9/23, 07:07] Meenakshi: விடை:விழை.

[9/23, 07:07] பாலூ மீ.: விடை விழை.

[9/23, 07:11] balakrishnan: விழை🙏

[9/23, 07:13] Srikrupa: விழை

[9/23, 07:15] வானதி: விழை

[9/23, 07:29] A D வேதாந்தம்: விடை= விழை/ வேதாந்தம்.

[9/22, 07:32] கி.பா ----- விழை

[9/23, 07:35] sathish: விழை
[
[9/23, 07:36] sankara subramaiam: விழை

[9/23, 07:36] Venkatesan M: இன்றைய விடை = விழை

[9/23, 07:40] Bharathi: விழை

[9/23, 07:45] Viji - Kovai: 23.9.20 விடை: விழை

[9/23, 07:47] prasath venugopal: விழை

[9/23, 08:03] கு.கனகசபாபதி, மும்பை: விழை

[9/23, 08:10] Dr. Ramakrishna Easwaran: *விழை*
விண்ணில் தொடங்கிய= *வி*
மழை முடிய = *ழை*
ஆசைப்படு = *விழை*

[9/23, 08:12] nagarajan: *விழை*

[9/23, 08:21] ஆர். நாராயணன்.: விழை

[9/23, 08:26] siddhan submn: விழை

[9/23, 08:52] Venkat UV: விழை 🙏🏽

[9/23, 11:16] shanthi narayanan: விழை

[9/23, 13:15] பானுமதி: விழை

[9/23, 15:59] balagopal: விழை.

[9/23, 18:00] Ramki Krishnan: Vizhai

********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

மண்வெட்டியால் வேலை செய்து குலை (3)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
குலை குலையா முந்திரிக்கா- கிராமப்புறங்களில் சிறுவர்-சிறுமிகள் இன்றும் தங்களது பொழுதை ஜாலியாக கழிப்பதற்காக விளையாடும் கிராமிய விளையாட்டாக திகழ்கிறது.

இந்த விளையாட்டின் போது ஒரு அருமையான பாடலை பாடியபடிதான் விளையாடுவார்கள். அந்த பாட்டு இதுதான்...

குலை குலையா முந்திரிக்கா..!
நரியே நரியே சுத்திவா..!

ஓட்டு வீட்டுல ஏறுவேன்..!
ஈட்டியால குத்துவேன்..!

பச்சரிசியை தின்பேன்..!
பல்ல உடைப்பேன்..!

புழுங்க அரிசியை தின்பேன்..!
புதுப்பல்ல உடைப்பேன்..!

குலை குலையா முந்திரிக்கா..!
நரியே நரியே சுத்திவா..!


கொள்ளை அடிச்சவன் எங்கே இருக்கான்..!
கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!
**********************
_*மண்வெட்டியால் வேலை செய்து குலை (3)*_
மண்வெட்டியால் வேலை செய்து = கொத்து
குலை = கொத்து
**********************
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ

துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
படம்: எதிர்நீச்சல்
**********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[9/24, 07:13] Ramarao திரைக்கதம்பம்: கொத்து

[9/24, 07:14] balakrishnan: கொத்து🙏

[9/24, 07:17] மீ.கண்ணண்.: கொத்து

[9/24, 07:19] V N Krishnan.: கொத்து=குலை

[9/24, 07:21] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கொத்து.

[9/24, 07:22] Meenakshi: விடை கொத்து

[9/24, 07:27] ஆர். நாராயணன்.: கொத்து

[9/24, 07:30] Viji - Kovai: 24.9.20 விடை
கொத்து

[9/24, 07:30] sridharan: கொத்து

[9/24, 07:38] கி.பா ------- கொத்து

[9/24, 07:41] பாலூ மீ.: விடை கொத்து.

[9/24, 07:45] sankara subramaiam: கொத்து

[9/24, 07:52] nagarajan: *கொத்து*

[9/24, 08:03] prasath venugopal: கொத்து

[9/24, 08:07] மாலதி: கொத்து

[9/24, 08:30] Venkatesan M: இன்றைய விடை = கொத்து

[9/24, 08:48] Bharathi: கொத்து

[9/24, 08:57] கு.கனகசபாபதி, மும்பை: கொத்து

[9/24, 09:03] பானுமதி: கொத்து

[9/24, 09:12] வானதி: கொத்து

[9/24, 09:13] Srikrupa: கொத்து

[9/24, 09:15] stat senthil: கொத்து

[9/24, 09:18] Dr. Ramakrishna Easwaran: *கொத்து* (ஒரு சொல், 2 பொருள்)

[9/24, 09:52] ஆர்.பத்மா: கொத்து

[9/24, 15:25] A D வேதாந்தம்: விடை= கொத்து/ வேதாந்தம்.

[9/24, 15:55] Ramki Krishnan: Koththu

[9/24, 18:48] N T Nathan: கொத்து

********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

யானை சூழ வந்த முதல்வருக்குச் சாமரம் (3)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*தமிழுக்கு கவரி வீசிய காவலன்*
_சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை_

*‘கவரி’* இந்தச் சொல்லின் பொருள் தேடி தமிழ்  அகராதிகள் ஒவ்வொன்றையும் புரட்டினேன். ‘ *கவரி* ’ என்றால் விசிறி, *சாமரம்* என்றுதான் பொருள் என்று அதுவரை நான் நினைத்திருந்தேன். 

புரட்டிப்புரட்டி படித்தபின்னர் தான் *எருமை, தேர், கவர்த்து, கவர்வது, சாமரை* போன்ற வேறு பொருள்களும் இருப்பதை அறிந்து வியந்துபோனேன்

*'அட்ட சுபம்’* என்று சொல்லக்கூடிய எட்டுவகையான மங்களப்பொருட்கள். அவை: _இணைக்கயல், கண்ணாடி, *சாமரம்* , கொடி, தோட்டி நிறைகுடம், முரசு, விளக்கு_ என்பன. இவற்றுள் ஒன்றுதான் *கவரி* .
_இதைத் தான் ‘சாமரம்’ என்று விளக்கம் தருகின்றார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள்._ 
**********************
_யானை சூழ வந்த முதல்வருக்குச் சாமரம் (3)_

_யானை_ = *கரி*
_வந்த முதல்வருக்கு_
= _முதலெழுத்து in வந்த_
= *வ*
_சூழ_ = " _வ"வை "கரி" சூழ_
= *கவரி*
= _சாமரம்_
**********************
இப்படி மங்கலம் நிறைந்த இந்தக்கவரி திருக்கோவில்களிலும், அரசனின் அரண்மனைகளிலும் இருக்கும்.

இந்தக் கவரியை அரண்மனையில் அரசன் கொலுவீற்றிருக்கும் போது சேவகம் செய்யும் ஏவலர்கள் வீசுவார்கள். இதுதான் மரபு. சேர மன்னன் அவையிலோ ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. அரசன் கவரி வீசினான். யாருக்குத்  தெரியுமா? ஒரு புலவருக்கு. அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? அரசனின் முரசுக்கட்டிலில் தூங்கிய புலவர் மோசிகீரனாருக்கு. 

வியப்பாக இருக்கிறதா? ஆம்! நாடாளும் மன்னன் தமிழுக்குத் தலைவணங்கி கவரி வீசிய இந்த இன்பக் காட்சியைத்தான் தமிழரின் அழியாத செல்வமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் புறநானூறு இலக்கியம் ஓவியமாய்த்  தீட்டிக்காட்டுகின்றது. 

இதோ, தமிழுக்குக் கவரி வீசிய காவலனின் இன்பம் தரும் சொற்சித்திரம்.

நான் தங்களுக்கு கவரி எடுத்து வீசும் பொழுது தங்களை மோசி கீரனாகக் கருதவில்லை. சங்கத்தமிழே என் மஞ்சத்தில் படுத்து உறங்குவதாகக் கருதினேன். அதனால்தான் கவரி எடுத்து வீசினேன்’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் மன்னன்.

‘அரசே! தங்களின் பெருந்தன்மையை என்னென்பேன். வறுமையில் வாடும் என் மீதா இத்தனை அன்பு காட்டுகின்றீர்கள்’ என்று உணர்வு பொங்கப்பாடினார். அப்போது பாடியது தான் இந்தப் புறநானூற்றுப்பாடல்.

‘மாசற விசித்த வார்புறு வன்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசும்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரை முகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்கு நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்து நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தன்னென
வீசி யோயே வியலிடம் கமழ
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவனது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படும் குருசில் நீ ஈங்குது செயலே’.

இந்தப் பாடலைக் கேட்ட மன்னன் தமிழ்ப்புலவனுக்குத் தலை வணங்கினான்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[9/25, 07:00] மீ.கண்ணண்.: கவரி

[9/25, 07:00] sathish: கவரி

[9/25, 07:00] Ramarao திரைக்கதம்பம்: கவரி

[9/25, 07:03] N T Nathan: கவரி

[9/25, 07:03] balakrishnan: கவரி🙏

[9/25, 07:04] Meenakshi: விடை:கவரி

[9/25, 07:07] பாலூ மீ.: விடை : கவரி

[9/25, 07:08] வானதி: கவரி

[9/25, 07:11] Srikrupa: கவரி

[9/25, 07:11] Venkat UV: கவரி 🙏🏽

[9/25, 07:15] akila sridharan: கவரி

[9/25, 07:16] sankara subramaiam: கவரி

[9/25, 07:28] A D வேதாந்தம்: விடை= கவரி/ வேதாந்தம்.
.
[9/25, 07:28] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கவரி.

[9/25, 07:37] prasath venugopal: கவரி

[9/25, 07:44] chithanandam: கவரி.

[9/25, 07:54] nagarajan: *கவரி*

[9/25, 07:54] Sucharithra: கவரி

[9/25, 08:11] Bharathi: கவரி

[9/25, 08:11] கு.கனகசபாபதி, மும்பை: கவரி

[9/25, 08:14] Viji - Kovai: 25.9.20 விடை
கவரி

[9/25, 08:25]
கி.பா --------- கவரி

[9/25, 08:49] மாலதி: கவரி

[9/25, 09:10] siddhan submn: கவரி

[9/25, 09:19] பானுமதி: கவரி

[9/25, 09:21] ஆர். நாராயணன்.: கவரி

[9/25, 09:30] Dr. Ramakrishna Easwaran: *கவரி*
_யானை_ = *கரி*
' _வந்த' முதல்வர்_ = *வ*
_சூழ_ = க- ரி என்ற எழுத்துகள் வ என்ற எழுத்தைச் சூழ்வதன் குறியீடு

Reminded me of the previous discussion on this forum about கவரிமா & கவரிமான்

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.’

[9/25, 13:06] ஆர்.பத்மா: கவரி

**********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

கீழானவனே, நீங்காச் சாபங்கள் ஆரம்பிக்கட்டும் (2)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*மனமே நீசன்… நீசனை நீக்கினால் ஈசன் .." இதன் பொருள் என்ன?*

நீசன் என்பதன் பொருள், அறிவில்லாதவன், கீழானவன், இழிந்தோன் ஆகும்.

மனம் தான் மனிதனை ஆட்டுவிக்கும் நீசன்.. அந்த மனமாகிய நீசனை துறந்து மனமற்ற நிலையை நீ அடைவதே இறைநிலை.

இங்கு ஈசன் என்பது இறை நிலையை குறிக்கும்.
**********************
_கீழானவனே, நீங்காச் சாபங்கள் ஆரம்பிக்கட்டும் (2)_

_ஆரம்பிக்கட்டும்_
= indicator to denote the first letters in the words _*நீ* ங்காச் *சா* பங்கள்_
= *நீசா*

_கீழானவன்_ = *நீசன்*
_கீழானவனே_ = *நீசா*
**********************
_நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை_

பாடல் 68 (நெடுங்கால)

_நெடுங்கால மோடினு *நீசர்* வெகுளி_

_கெடுங்கால மன்றிப் பரக்கு- மடுங்காலை_ 

_நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே_ 

_சீர்கொண்ட சான்றோர் சினம்._

*பதவுரை*

*நீசர்*
= கீழ்மக்களுடைய,
வெகுளி= கோபமானது,
நெடுங்காலம்= அநேக காலம்,
ஓடினும்= சென்றாலும்,
கெடும் காலம்= கெட்டுப் போகுங்காலம்,
இன்றி= இல்லாமல்,
பரக்கும்= வளர்ந்து நிற்கும்;
சீர்= சிறப்பை,
கொண்ட= கொண்டிருக்கிற,
சான்றோர்= பெரியோர்,
சினம்= கோபமானது,
அடும்= காய்ச்சும்,
காலை= காலத்தில்,
நீர்= நீரானது,
கொண்ட= கொண்டிருக்கிற,
வெப்பம்போல்= உஷ்ணம்போல்,
தானே= தனக்குத்தானே,
தணியும்= ஆறும்.

*கருத்துரை*

கீழ்மக்கள் கோபம் நெடுநாட் சென்றாலும் பெருகி நிற்கும்; பெரியோர் கோபம் நீர்கொண்ட வெப்பம்போல் தனக்குத் தானே தணியும்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[9/26, 07:01] Ramarao திரைக்கதம்பம்: நீசா

[9/26, 07:02] V N Krishnan.: நீசா!

[9/26, 07:03] chithanandam: நீசா

[9/26, 07:04] மீ.கண்ணண்.: நீசா

[9/26, 07:09] பாலூ மீ.: விடை : ( நீ) ங்காச் (சா) பங்கள் = நீசா.

[9/26, 07:14] Meenakshi: விடை: நீசா.

[9/26, 07:26] ஆர். நாராயணன்.: நீசா

[9/26, 07:30] sankara subramaiam: நீசா

[9/26, 07:30] stat senthil: நீசா

[9/26, 07:17] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:நீசா

[9/26, 07:04] balakrishnan: 🙏நீசா

[9/26, 07:39] ஆர்.பத்மா: நீசா

[9/26, 07:41] sathish: நீசா

[9/26, 07:45] akila sridharan: நீசா
[9/25, 07:03] N T Nathan: கவரி

[9/26, 07:58] N T Nathan: நீசா

[9/26, 07:59] nagarajan: *நீசா*

[9/26, 08:00] வானதி: நீசா

[9/26, 08:01] கு.கனகசபாபதி, மும்பை: நீசா

[9/26, 08:03]
கி.பா -------நீசா

[9/26, 08:11] Sucharithra: நீசா

[9/26, 08:19] prasath venugopal: நீசா

[9/26, 08:24] Ramki Krishnan: நீசா

[9/26, 08:34] Viji - Kovai: 26.9.20விடை
நீசா

[9/26, 08:37] Srikrupa: நீசா

[9/26, 08:43] Dr. Ramakrishna Easwaran: *நீசா* !

[9/26, 14:07] shanthi narayanan: நீசா

[9/26, 18:13] siddhan submn: நீசா

**********************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்