இன்று காலை வெளியான வெடி
பின் வாங்கினால் துரத்தும் பகைவன் முன்னே (4)
அதற்கான விடை: எதிரில் = எதிரி + ல்
எதிரி = பகவன்
ல் = "பின்" வாங்கினால்
இதற்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
பின் வாங்கினால் துரத்தும் பகைவன் முன்னே (4)
அதற்கான விடை: எதிரில் = எதிரி + ல்
எதிரி = பகவன்
ல் = "பின்" வாங்கினால்
இதற்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
*************************
கடந்த ஞாயிறன்று *கலத்தில்* பயணிக்காதவர்கள் இன்று *பின்வாங்காமல் எதிரில்* வருவதை காணும் போது மிக்க மகிழ்வாய் உள்ளது!
💐
************************
மலருக்கு பகைவன் அந்தி மாலை..........!
மதுவுக்கு பகைவன் உயிரின் விலை..........!
நெல்லுக்கு *பகைவன்* மஞ்சள் அறுவடை........!
நெருப்புக்கு பகைவன் வெள்ளி நீரோடை..........!
காதலுக்கு பகைவன் கெட்ட எண்ணம்.........!
கவிதைக்கு நண்பன் நல்ல மனம்..........!
ஆழமாக நிலைத்து நிற்கும் நட்பை போல.......
(உஷா)
**************************
_பின் வாங்கினால் துரத்தும் பகைவன் முன்னே (4)_
_பின் வாங்கினால்_
= _[வாங்கினா]ல்_
= *ல்*
_பகைவன்_ = *எதிரி*
_துரத்தும்_ = indicator for placing *எதிரி* before *ல்*
= *எதிரில்*
= _முன்னே_
*************************
*பகைவனுக்கருள்வாய் – பாரதியார் கவிதை*
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான். (பகைவ)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)
தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)
*பாரதியார்*
*************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 07-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தெரிவித்து அடையாளமிடு வைகை வெள்ளத்தில் பெயர்போன உணவு (6)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*வைகையில் வெள்ளம்... பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவன் - மதுரை பிட்டுத் திருவிழா*
வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கரைகள் உடையும் அபாயத்தில் இருக்கவே மக்களை வீட்டுக்கு ஒருவர் வந்து கரையை பலப்படுத்த பாண்டிய மன்னன் கட்டளையிட்டான். வந்தி என்ற மூதாட்டிக்கு உதவ கூலி ஆள் போல இறைவன் சிவபெருமானே வந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம்.
**********************
_தெரிவித்து அடையாளமிடு வைகை வெள்ளத்தில் பெயர்போன உணவு (6)_
_அடையாளமிடு_
= *குறி*
_வைகை வெள்ளத்தில் பெயர்போன உணவு_
= *பிட்டு*
_தெரிவித்து_
= *குறி+பிட்டு*
= *குறிப்பிட்டு*
= தெரிவித்து
**********************
*பிட்டுக்கு மண் சுமந்த லீலை.*
வந்தி என்னும் *பிட்டு* விற்கும் ஏழை மூதாட்டிக்கு வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை.
*கூலி ஆளாக வந்த இறைவன்*
இறைவனிடம் முறையிட்டு கண்ணீர் விட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே உதிர்ந்த பிட்டை சிவபெருமான் கூலியாக ஏற்று, வந்தியின் வேலையை செய்ய ஒத்துக்கொண்டார். பிட்டு சுவையாக இருக்கவே, அதனை சாப்பிட்டு விட்டு தனது வேலையைச் செய்வதாக கூறினார் சிவன்.
*சிவனை அடித்த மன்னன்*
வந்திருப்பது சிவன் என்று பாண்டிய மன்னனுக்கு தெரியாதே.... கோபம் கொண்ட பாண்டிய மன்னன் கூலியாளின் முதுகில் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். எல்லாம் வல்ல பரம்பொருளான இறைவனுக்கு கிடைத்த பிரம்படியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான்.
அப்போதுதான் தனது தவறையும் உணர்ந்தான் மன்னன். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் தான் *பிட்டுக்கு மண் சுமந்த லீலை.*
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவில் மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்.
************************
[9/7, 06:58] Ramarao திரைக்கதம்பம்: குறிப்பிட்டு
[9/7, 07:01] sathish: குறிப்பிட்டு
[9/7, 07:02] வானதி: குறிப்பிட்டு
[9/7, 07:32] A D வேதாந்தம்: விடை= குறிப்பிட்டு/ வேதாந்தம்
[9/7, 07:47] nagarajan: *குறிப்பிட்டு*
[9/7, 08:06] பாலூ மீ.: குறிப்பிட்டு.
[9/7, 08:21] மாலதி: தயிர்சாதம்
[9/7, 08:28] ஆர். நாராயணன்.: குறிப்பிட்டு
[9/7, 10:59] balakrishnan: குறிப்பிட்டு🤨😇🙏
[9/7, 13:32] Sucharithra: குறிப்பிட்டு
[9/7, 17:04] கு.கனகசபாபதி, மும்பை: குறிப்பிட்டு
[9/7, 17:41] siddhan submn: குறிப்பிட்டு
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சித்தப்பா சித்தியிடையே வந்து வழுக்கிவிழச் செய்யும் (2)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
*பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம்’*
நரிக்குறவர் பாடல்
************************
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ
நான் கோலா லம்பூர் காட்டுக்குள்ளே குருவி புடிக்க போனேன்
அங்கு ஆலாவட்டம் போட்டுகிட்டு அக்க மகளும் வந்தா
_நான் *பாசி* மணி பவள மணி ஊசி விக்க போனேன்_
ஒரு ராசா மொவன்.. ஒரு ராச மொவன் காசில்லாம ஊசியின கேட்டான்
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ
(படம்: காத்தவராயன்.)
*************************
_சித்தப்பா சித்தியிடையே வந்து வழுக்கிவிழச் செய்யும் (2)_
_இடையே வந்து_
= indicator to denote letters in the middle of _சித்தப்பாசித்தி_
= _[சித்தப்]பாசி[த்தி]_
= *பாசி*
= _வழுக்கிவிழச் செய்யும்_
************************
*நீர்ப் பாசி*
_பத்துப்பாட்டு_
_மலைபடுகடாம்_
அழுந்தி இருக்கும் கிழங்கும்,அசையும்,
’புழகு’ என்னும் எருக்கு செடிகளும் நெருங்கி வளர்ந்திருக்கும் மலைச்சாரல்.அங்கு, விழுந்தவர்களைக் கொல்லும் ஆழமான குளம் அருகில்,தனது வழு வழுப்பினால் இடத்தை மறைக்கும் அளவுக்கு நுண்ணிய *நீர்ப் பாசி* படர்ந்து இருக்கும்.அந்த அரிய இடம் அந்த வழியில் செல்பவர்களின் கால்களைத் தளர்த்தி விடக்கூடும்.அதனால் வழி முழுதும் பின்னி வளர்ந்திருக்கும் நுண்ணியக் கோல்கள் உடைய சிறு ‘வேரல்’ என்னும் மூங்கிலையும்,மென்மையான எருவைக் கொல்களையும் பற்றிக் கொண்டு செல்லுங்கள்.
பாடல் :
_அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்_
_விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா_
_வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி_
_அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய_
_முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு_
_எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்_
*குறிப்பு*
அழுந்து-கிழங்கு
அலமரும்-அசையும்
புழகு- எருக்கு
அமல்-நெருக்கம்
குண்டு-ஆழம்
கயம்-குளம்
வழும்பு-வழுவழுப்பு
அருப்பம்-அரிய இடம் அருமை
வேரல்-மூங்கில்
எருவைக்கோல்
= பருந்தைப் போல் பற்றிக்கொள்ளும் கோல் – இக்காலத்தில் கால் எலும்பு மருத்துவத்துக்குப் பின் கால் நன்றாகக் கூடும் வரையில் ஊன்றிக்கொண்டு நடப்பதற்குத் தரும் கோல் போன்றது. இது தரையில் ஊன்றும் பகுதியில் பருந்தின் கால்விரல் போல 4 பிளவுகளைக் கொண்டிருத்தலை எண்ணுக.
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்
*********************
💐🙏🏼💐
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
*பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம்’*
நரிக்குறவர் பாடல்
************************
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ
நான் கோலா லம்பூர் காட்டுக்குள்ளே குருவி புடிக்க போனேன்
அங்கு ஆலாவட்டம் போட்டுகிட்டு அக்க மகளும் வந்தா
_நான் *பாசி* மணி பவள மணி ஊசி விக்க போனேன்_
ஒரு ராசா மொவன்.. ஒரு ராச மொவன் காசில்லாம ஊசியின கேட்டான்
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ
(படம்: காத்தவராயன்.)
*************************
_சித்தப்பா சித்தியிடையே வந்து வழுக்கிவிழச் செய்யும் (2)_
_இடையே வந்து_
= indicator to denote letters in the middle of _சித்தப்பாசித்தி_
= _[சித்தப்]பாசி[த்தி]_
= *பாசி*
= _வழுக்கிவிழச் செய்யும்_
************************
*நீர்ப் பாசி*
_பத்துப்பாட்டு_
_மலைபடுகடாம்_
அழுந்தி இருக்கும் கிழங்கும்,அசையும்,
’புழகு’ என்னும் எருக்கு செடிகளும் நெருங்கி வளர்ந்திருக்கும் மலைச்சாரல்.அங்கு, விழுந்தவர்களைக் கொல்லும் ஆழமான குளம் அருகில்,தனது வழு வழுப்பினால் இடத்தை மறைக்கும் அளவுக்கு நுண்ணிய *நீர்ப் பாசி* படர்ந்து இருக்கும்.அந்த அரிய இடம் அந்த வழியில் செல்பவர்களின் கால்களைத் தளர்த்தி விடக்கூடும்.அதனால் வழி முழுதும் பின்னி வளர்ந்திருக்கும் நுண்ணியக் கோல்கள் உடைய சிறு ‘வேரல்’ என்னும் மூங்கிலையும்,மென்மையான எருவைக் கொல்களையும் பற்றிக் கொண்டு செல்லுங்கள்.
பாடல் :
_அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்_
_விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா_
_வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி_
_அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய_
_முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு_
_எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்_
*குறிப்பு*
அழுந்து-கிழங்கு
அலமரும்-அசையும்
புழகு- எருக்கு
அமல்-நெருக்கம்
குண்டு-ஆழம்
கயம்-குளம்
வழும்பு-வழுவழுப்பு
அருப்பம்-அரிய இடம் அருமை
வேரல்-மூங்கில்
எருவைக்கோல்
= பருந்தைப் போல் பற்றிக்கொள்ளும் கோல் – இக்காலத்தில் கால் எலும்பு மருத்துவத்துக்குப் பின் கால் நன்றாகக் கூடும் வரையில் ஊன்றிக்கொண்டு நடப்பதற்குத் தரும் கோல் போன்றது. இது தரையில் ஊன்றும் பகுதியில் பருந்தின் கால்விரல் போல 4 பிளவுகளைக் கொண்டிருத்தலை எண்ணுக.
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்
*********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்.
************************
[9/8, 07:01] Ramarao திரைக்கதம்பம்: பாசி
[9/8, 07:01] V N Krishnan.: பாசி
[9/8, 07:01] akila sridharan: பாசி
[9/8, 07:01] balakrishnan: பாசி🙏
[9/8, 07:02] A D வேதாந்தம்: விடை= பாசி/ வேதாந்தம்.
[9/8, 07:03] Viji - Kovai: 8.9.20 விடை பாசி
[9/8, 07:03] chithanandam: பாசி
[9/8, 07:06] Srikrupa: பாசி
[9/8, 07:07] மீ.கண்ணண்.: பாசி
[9/8, 07:07] N T Nathan: பாசி
[9/8, 07:07] வானதி: பாசி
[9/8, 07:07] பாலூ மீ.: பாசி
[9/8, 07:07] Bharathi: பாசி
[9/8, 07:10] Dr. Ramakrishna Easwaran: *பாசி*
[9/8, 07:11] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:பாசி
[9/8, 07:11] balagopal: Good morningsir.விடை.சித்தப்(பாசி)த்தி.பாசி.
[9/8, 07:12] Meenakshi: இன்றையவிடை:பாசி
[9/8, 07:13] Suba: Hello sir,பாசி
[9/8, 07:13] sathish: பாசி
[9/8, 07:18] Sucharithra: பாசி
[9/8, 07:20] usha chennai: பாசி
[9/8, 07:20] sridharan: பாசி
[9/8, 07:25] prasath venugopal: பாசி
[9/8, 07:39] sankara subramaiam: பாசி
[9/8, 07:47] கி.பா - ---------------பாசி
[9/8, 07:49] siddhan submn: பாசி
[9/8, 08:01] Ramki Krishnan: பாசி
Hidden word in சித்தப்(பா சி)த்தியிடையே
[9/8, 08:04] பானுமதி: பாசி
[9/8, 08:11] ஆர். நாராயணன்.: பாசி
[9/8, 08:13] stat senthil: பாசி
[9/8, 08:38] nagarajan: *பாசி*
[9/8, 08:51] மாலதி: பாசி
[9/8, 10:04] கு.கனகசபாபதி, மும்பை: பாசி
[9/8, 16:36] ஆர்.பத்மா: பாசி
[9/8, 19:18] shanthi narayanan: பாசி
************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சினந்து அரசனுக்குப் பைத்தியம் பிடித்தது (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
*************************
சிவகாமி *சினந்து* கேட்டாள்
நடராஜப் பெருமானை
இப்போது போட்டியிட்டு
என்னோடு ஆடத்தயாரா?
சுடிதார் வந்துவிட்ட
சூட்சமம் புரிந்ததால்
முடியாது என்று
மும்முறை ஆட்டினார்
கால்தூக்கும் தத்துவம்
காலத்தால் தகர்ந்தது
உடையின் மாற்றத்தால்
ஒழிந்தது ஆண்மை!
- சிகரம்.
*************************
_சினந்து அரசனுக்குப் பைத்தியம் பிடித்தது (4)_
_அரசன்_ = *கோ*
_பைத்தியம்_ = *பித்து*
_பிடித்தது_ = Indicator for *கோ+பித்து*
= *கோபித்து*
= _சினந்து_
*************************
*கவிதையை விற்று…*
காற்று வாங்கப் போனேன்
கவிதையுடன்!
திசை திரும்பிச் சென்றது காற்று!
காரணம் கேட்டேன்.
கோபமாயிருக்கும்
என்றது கவிதை.
ஏன் கோபம்?
கோபத்திற்குக் காரணம் வேறா?
*சினந்து* கொண்டது கவிதை.
கடை வீதிக்குச் சென்றேன்.
கவிதை உடன் வந்தது.
அழகியதெல்லாம் வேண்டும்
என்று அடம் பிடித்தழுதது.
தாங்கவில்லை தொந்திரவு!
காசுமில்லை கையில்!
காதலுடன் பார்த்த கடைக்காரனிடம்
கவிதையை விற்றுத் திரும்பினேன்
கையில் காசுடன்!😌
*************************
விடையளித்தோர் பட்டியல்.
************************
[9/9, 07:01] sathish: கோபித்து
[9/9, 07:01] Ramarao திரைக்கதம்பம்: கோபித்து
[9/9, 07:01] akila sridharan: கோபித்து
[9/9, 07:01] V N Krishnan.: கோபித்து
[9/9, 07:01] sankara subramaiam: கோபித்து
[9/9, 07:02] Suba: Hello sir, கோபித்து
[9/9, 07:08] பாலூ மீ.: விடை கோபித்து.
[9/9, 07:09] மீ.கண்ணண்.: கோபித்து
[9/9, 07:09] Venkat UV: கோபித்து 🙏🏽
[9/9, 07:10] A D வேதாந்தம்: விடை= கோபித்து/ வேதாந்தம்.
[9/9, 07:10] Meenakshi: விடை:கோபித்து.
[9/9, 07:10] chithanandam: கோபித்து
[9/9, 07:12] Viji - Kovai: 9.9.20 விடை கோபித்து
[9/9, 07:13] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கோபித்து
[9/9, 07:22] Bharathi: கோபித்து
[9/9, 07:24] Srikrupa: கோபித்து
[9/9, 07:28] balakrishnan: கோபித்து🙏
[9/9, 07:49] prasath venugopal: கோபித்து
[9/9, 07:56] N T Nathan: கோபித்து
[9/9, 07:56] Sucharithra: கோபித்து
[9/9, 08:04] கு.கனகசபாபதி, மும்பை: கோபித்து
[9/9, 08:14] ஆர். நாராயணன்.: கோபித்து
[9/9, 08:28] siddhan submn: கோபித்து
[9/9, 08:47] பானுமதி: கோபித்து
[9/9, 08:57] வானதி: கோபித்து
[9/9, 09:15] Dr. Ramakrishna Easwaran: *கோபித்து*
_அரசன்_ = *கோ*
_பைத்தியம்_ = *பித்து*
_பிடித்தது_ : indicator of joining (grasping/capturing) the 2 parts of the word play
_சினந்து_ : definition
[9/9, 09:17] nagarajan: *கோபித்து*
[9/9, 11:22] sridharan: கோபித்து
[9/9, 12:40] shanthi narayanan: கோபித்து
[9/9, 13:22] ஆர்.பத்மா: கோபித்து
[9/9, 15:59] balagopal: அரசன்.கோ.
பைத்தியம்.பித்து.
கோ+பித்து.கோபித்து.
சினந்து.கோபித்து.
[9/9, 17:53]கி.பா------------- கோபித்து
[9/9, 20:10] மாலதி: கோபித்து
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மனதுக்கேற்ற முருகன் குறையுடன் வரும் முன் பிள்ளையாருக்கு மரியாதை (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மனதுக்கேற்ற முருகன் குறையுடன் வரும் முன் பிள்ளையாருக்கு மரியாதை (4)
முருகன் = கந்தன்
குறையுடன் வரும் = கந்த[ன்]
= கந்த
பிள்ளையாருக்கு மரியாதை
= பிள்ளையார் சுழி
= உ
முன் = indicator to place உ before கந்த
= உகந்த
= மனதுக்கேற்ற
**********************
*பூஜைக்கு உகந்த மலர்கள் :*
விநாயகர் - அறுகு, சண்பகம், பாதிரி, சூரியகாந்தி, வன்னி,
சிவன் - கொன்றை, வில்வம், தும்பைபூ, சங்குபூ, செம்பருத்தி
விஷ்ணு - துளசி, மாதவி, குருந்து, வாகை, மத்யாணி, கருங்கால் கொன்றை, முருக்கு, அலரி, செம்பரத்தை, செந்திலகம், மருக்கொழுந்து
பிரமன் - அலரி
வைரவர் - செவ்வலரி
சூரியன் - தாமரை
முருகன் - வெட்சி, கடம்பு, முல்லை, குறிஞ்சி, மல்லிகை, காந்தள்
பார்வதி - நந்தியாவர்த்தனம் , நீலோற்பலம், தாமரை, சூரியகாந்தி, செம்பவளமல்லி
துர்க்கை - செவ்வெருக்கு சிவப்பு, அரலி, கொன்றைமலர்
இலக்குமி - நெய்தல், செந்தாமரை
சரஸ்வதி - வெண்தாமரை
அக்னி - வன்னி
சூரியன் - செந்தாமரை
சந்திரன் - வெள்ளரலி
செவ்வாய் - செண்பகம்
புதன் - வெண்காந்தள்
வியாழன் - முல்லை
வெள்ளி - வெண்தாமரை
சனி - கருங்குவளை
ராகு - மந்தாரை
கேது -செவ்வல்லி
*பூஜையின் போது விலக்கப்பட வேண்டிய மலர்கள் :*
விநாயகர் - துளசி
சிவன் - தாழம்பூ
விஷ்ணு - அட்சதை (எருக்கு, ஊமத்தம்பூ)
வைரவர் - நந்தியாவர்த்தனம் , மல்லிகை
சூரியன் - வில்வம்
பார்வதி - நெல்லி
துர்க்கை - அறுகு
இலக்குமி - தும்பைபூ
சரஸ்வதி - பவளம்.
**********************
விடையளித்தோர் பட்டியல்.
************************
[9/10, 07:02] Ramarao திரைக்கதம்பம்: உகந்த
[9/10, 07:05] V N Krishnan.: உகந்த
[9/10, 07:09] balakrishnan: 🙏 உகந்த
[9/10, 07:14] chithanandam: உகந்த
[9/10, 07:18] மீ.கண்ணண்.: உகந்த
[9/10, 07:21] Viji - Kovai: 10.9.20 விடை உகந்த
[9/10, 07:22] sankara subramaiam: கணவன்
[9/10, 07:30] Meenakshi: விடை:உகந்த.
[9/10, 07:38] prasath venugopal: உகந்த
[9/10, 07:41] Sucharithra: உகந்த
[9/10, 07:45] பாலூ மீ.:
உ + கந்த = விடை உகந்த
[9/10, 08:20] கு.கனகசபாபதி, மும்பை: உகந்த
[9/10, 08:28] ஆர். நாராயணன்.: உகந்த
[9/10, 08:31] மாலதி: உகந்த
[9/9, 09:17] nagarajan: *கோபித்து*
[9/10, 08:56] nagarajan: *உகந்த*
[9/10, 08:58] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:உகந்த.
[9/10, 10:06] வானதி: உகந்த
[9/10, 10:07] Srikrupa: உகந்த
[9/10, 11:40] பானுமதி: உகந்த
[9/10, 13:41] ஆர்.பத்மா: உகந்த
[9/10, 15:23] Ramki Krishnan: உகந்த
[9/10, 16:52] siddhan submn: உகந்த (உ + கந்த(ன்))
[9/10, 20:12] கி.பா ---------------உகந்த
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தூண்டிலில் துடிப்பது அங்கு தலையின்றி வியர்த்து அவதியுறு (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*நானும் நீயும்*
கொட்டும் மழையில்-நான்
குடை விரிப்பதில்லை
கொளுத்தும் வெய்யிலில்-நான்
நிழல் தேடுவதில்லை
நடுங்கும் குளிரில்-நான்
ஸ்வெட்டர் அணிவதில்லை
புழுங்கும் அறையில்-நான்
விசிறி கேட்பதில்லை
குடையாய் நிழலாய்
ஸ்வெட்டராய் விசிறியாய்
என் தேவைக்கேற்றபடி
மாற்றம் கொண்டியங்குகிறாய்
நீ!
--------------------
புதுவைப் பிரபா
**********************
_தூண்டிலில் துடிப்பது அங்கு தலையின்றி வியர்த்து அவதியுறு (4)_
_தூண்டிலில் துடிப்பது_
= *புழு*
_அங்கு தலையின்றி_
= [ _~அ]~ ங்கு_ = *ங்கு*
_வியர்த்து அவதியுறு_
= *புழு+ங்கு*
= *புழுங்கு*
**********************
*தேவாரம்*
பன்னிரு திருமறை.
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
பாடல் எண் : 2
_*புழுங்குதீ* வினையேன் வினைகெடப் புகுந்து_
_புணர்பொரு ளுணர்வுநூல்_ _வகையால்_
_வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்_
_வளரொளி மணிநெடுங் குன்றே_
_முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும்_
_முகத்தலை யகத்தமர்ந் தடியேன்_
_விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த_
_வெள்ளமாய் உள்ளமா யினையே._
*பொழிப்புரை :*
தீவினையால் மனம் வருந்தும் அடியேனுடைய தீவினைகள் நீங்குமாறு எதிர்வந்து அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூல் முறைவாயிலாக நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனைப்பொழிகின்ற பவளம் போன்ற வாயினையும், முக்கண்களையும் உடைய ஒளிவளருகின்ற நெடிய மாணிக்கமலை போன்றவனே! ஒலிக்கின்ற இனிய நீரில் பாய்ந்து இளைய, வரால் மீன்கள் தாவித் திரியும் திருமுகத்தலை என்ற திருத்தலத்தினும் அடியேனுடைய உள்ளத்தினும் அமர்ந்து அடியேன் நுகரும் இனிய கனியாகவும் இனிய ஆனந்த வெள்ளமாகவும் அதன்கண் பொருந்தினாய். இதற்கு அடியேன் செய்யத்தக்க கைம்மாறு யாது?
*குறிப்புரை :*
புழுங்குதல் = வேதல். "புழுங்கு" என்றது, "வினை யேன்" என்பதன் இறுதி நிலையோடு முடியும். "புழுங்குதீவினையேன்" என்றது, `தீவினையால் புழுங்குவேன்' என்றவாறாம்.
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
[9/11, 07:00] Ramarao திரைக்கதம்பம்: புழுங்கு
[9/11, 07:02] Sucharithra: புழுஙகு
[9/11, 07:03] Srikrupa: புழுங்கு
[9/11, 07:04] balakrishnan: புழுங்கு. 🙏
[9/11, 07:04] V N Krishnan.: புழுங்கு
[9/11, 07:05] மீ.கண்ணண்.: புழுங்கு
[9/11, 07:06] N T Nathan: புழுங்கு
[9/11, 07:07] akila sridharan: புழுங்கு
[9/11, 07:09] stat senthil: புழுங்கு
[9/11, 07:14] பாலூ மீ.: புழு+ ங்கு = புழுங்கு
[9/11, 07:14] A D வேதாந்தம்: விடை= புழுங்கு/ வேதாந்தம்
[9/11, 07:21] sankara subramaiam: புழுங்கு
[9/11, 07:21] Meenakshi: விடை:புழுங்கு.
[9/11, 07:27] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:புழுங்கு
[9/11, 07:30] chithanandam: புழுங்கு
[9/11, 07:28] Viji - Kovai: 11.9.20 விடை புழுங்கு
[9/11, 07:45] balagopal: Good morning sir.விடை.புழுங்கி.
[9/11, 07:51] prasath venugopal: புழுங்கு
[9/11, 07:59] nagarajan: *புழுங்கு*
[9/11, 08:41] வானதி: புழுங்கு
[9/11, 09:22] ஆர். நாராயணன்.: புழுங்கு
[9/11, 09:43] siddhan submn: புழுங்கு
[9/11, 09:48] ஆர்.பத்மா: புழுங்கு
[9/11, 09:59] Ramki Krishnan: புழுங்கு
[9/11, 10:08] கு.கனகசபாபதி, மும்பை: பழுங்கு
[9/11, 11:51] shanthi narayanan: புழுங்கு
[9/11, 14:01] மாலதி: புழுங் கு
[9/11, 14:45] பானுமதி: புழுங்கு
[9/11, 16:32] கோவிந்தராஜன் korea: புழுங்கு
[9/11, 17:21]
கி.பா ---------- புழுங்கு
[9/11, 19:15] Venkat UV: புழுங்கு 🙏🏽
[9/11, 20:24] usha chennai புழுங்கு
*இன்றைய உதிரிவெடி!*( 12-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஆடு மாடு இல்லாமல் புகுந்த தடயம் படகோட்டிக்குதவும் (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கனவு காணும் வாழ்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
*துடுப்பு* கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
(படம் : நீங்கள் கேட்டவை)
**********************
_ஆடு மாடு இல்லாமல் புகுந்த தடயம் படகோட்டிக்குதவும் (4)_
_மாடு_ = *ஆ*
_மாடு இல்லாமல் ஆடு_
= *ஆடு- ஆ = டு*
_தடயம்_ = *துப்பு*
_புகுந்த_ = *டு* inside *துப்பு*
= *துடுப்பு*
= _படகோட்டிக்குதவும்_
**********************
*துடுப்பு* பெயர்ச்சொல்.
_படகுகளை உந்தித் தள்ள பயன்படும் கருவி_
சட்டுவம்
அகப்பை
பூங்கொத்து
_அகப்பைபோன்ற காந்தள்மடல்_
**********************
*வார்த்தை விளையாட்டு*
காளமேகப் புலவரின் மொழித்திறன் அமைந்த பாடல்கள் பாராட்டுக்குரியன. மெய்யெழுத்துகளில் வல்லினம் (க,ச,ட,த,ப,ற), மெல்லினம் (ஞ,ங,ண,ந,ம,ன), இடையினம் (ய,ர,ல,வ,ழ,ள) என்பன வரையறுக்கப்பட்டுள்ளன. மூவினங்களையும்
வைத்துத் தனித்தனியே இப்புலவர் பாடியுள்ள பாங்கு குறிக்கத்தக்கது.
_வல்லினம் அமையப் பாடியது._
பாடல்:
_""துடித்துத் துடித்துத் *துடுப்பெடுத்த* கோடல்_
_தொடுத்த தொடைகடுக்கை பொன்போற் -பொடித்துத்_
_தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்_
_கடிப டைத்துக் காட்டிற்றுக் காடு''_
************
பதம் பிரித்த பின்...
துடித்துத் தடித்துத் *துடுப்பு* எடுத்த கோடல்
தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் பொடித்துத்
தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக்
கடி படைத்துக் காட்டித்துக் காடு
*********
இப்பாடலில் கார்காலம் வருணிக்கப்படுகிறது. அதாவது, தான் பார்க்கும் அக்காடு, அம்மழைத் தருணத்தில் ஒரு மணப்பந்தலின் தன்மையைப் பெற்றுவிட்டதாகப் பாடியுள்ளார்.
மின்னல் மின்னியதுபோல் ஒளியுடன் காந்தள் என்னும் மலர்கள் அரும்புகளாகிய துடுப்புகளை ஏந்தின. கொன்றை அரும்புகள் பொன் மாலைகள் போலத் தொங்கின. வளையணிந்த தோள்கள் அழகாகச் சிலிர்த்துத் துடிதுடிப்பனபோல மூங்கில்கள் சாய்ந்தாடின. மயிலினம், திருமணப் பந்தலில் நடனமாடும் நடனமாதர் போலக் கூத்தாடத் தொடங்கியது. தனக்குத்தானே மணம் செய்து கொண்டதுபோல, அதாவது மணப்பந்தல் போன்று, தான் பார்த்து ரசித்த அந்தக் காடு காட்சியளித்ததாகப் பாடியுள்ளார். இப்பாடலில் "ல்' என்ற இடையெழுத்தும், "ன்' என்ற மெல்லெழுத்தும் தவிரப் பிற அனைத்தும் வல்லெழுத்துகளே!
*துக்கடா*
காளமேகத்தின் மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது இந்தப் பாட்டும் கருத்தும் கொஞ்சம் சாதாரணமாகத் தோன்றுகிறது அல்லவா? அதற்குக் காரணம் உண்டு, இது கருத்துக்காக எழுதிய பாட்டு அல்ல, சவாலுக்காக எழுதியது!
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************
[9/12, 07:05] Thiru subramanian: துடுப்பு
[9/12, 07:05] Ramarao திரைக்கதம்பம்: துடுப்பு
[
[9/12, 07:05] Thiru subramanian: துடுப்பு
[9/12, 07:05] stat senthil: துடுப்பு
[9/12, 07:06] balakrishnan: துடுப்பு🙏
[9/12, 07:06] N T Nathan: துடுப்பு
[9/12, 07:07] பாலூ மீ.: துப்பு + டு துடுப்பு.
[9/12, 07:08] மீ.கண்ணண்.: துடுப்பு
[9/12, 07:14] sathish: துடுப்பு
[9/12, 07:14] sankara subramaiam: துடுப்பு
[9/12, 07:15] ஆர். நாராயணன்.: துடுப்பு
[9/12, 07:16] akila sridharan: துடுப்பு
[9/12, 07:17] V N Krishnan.: துடுப்பு
[9/12, 07:19] A D வேதாந்தம்: விடை= துடுப்பு/ வேதாந்தம்
[9/12, 07:21] வானதி: துடுப்பு
[9/12, 07:22] Meenakshi: இன்றையலிடை:துடுப்பு
[9/12, 07:23] Srikrupa: துடுப்பு
[9/12, 07:28] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:துடுப்பு
[9/12, 07:34] sridharan: துடுப்பு.
[9/12, 07:50] prasath venugopal: துடுப்பு
[9/12, 08:00] Ramki Krishnan: துடுப்பு (டு inside துப்பு)
[9/12, 08:15] Viji - Kovai: 12.9.20 விடை
துடுப்பு
[9/12, 08:41] usha ( chennai.): துடுப்பு
[9/12, 08:42] கு.கனகசபாபதி, மும்பை: துடுப்பு
[9/12, 08:55] Sucharithra: துடுப்பு
[9/12, 09:16] மாலதி: துடுப்பு
[9/12, 09:54] nagarajan: *துடுப்பு*
[9/12, 11:13] chithanandam: துடுப்பு
[9/12, 12:17] பானுமதி: துடுப்பு
[9/12, 15:38] ஆர்.பத்மா: துடுப்பு
[9/12, 18:44] siddhan submn: துடுப்பு (துப்பு + டு)
(9/12, 29:35)
கி.பா---------துடுப்பு
***********************