Skip to main content

விடை 4088


இன்று காலை வெளியான வெடி:

மெதுவாக இடையை வளைத்து ஓர்  ஆசாமி சாமி முன்னே தேவாரம் பாடும் உரிமை கொண்டவர் (4)
அதற்கான விடை:
ஓதுவார் = (மெ)துவா(க) + ஓர்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.
பழமொழி.
***********
ஓதுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையில்

உழுவாரெல்லாம் கருமார் புறக்கடையில்

காராளர் பெருமையெல்லாம் 
கண்ணாளர் கைத்தொழிலே “………..

(கம்பர் இயற்றிய ஏர் எழுபது என்னும் நூலிலிருந்து) …

விளக்கம் ::- 
வேதம் ஓதுபவரெல்லாம் அறுவடை முடிந்த பின் உழவர் வீட்டு வாசலில் தான்யத்தை பெற காத்திருப்பார்கள்..

அதே உழவர் தனக்கு வேண்டிய கருவிகளுக்காக கருமாரின்(கொல்லர்) புறக்கடையில் காத்திருப்பார்கள்.

அதே போன்று, கம்மாளர் கைத்தொழிலே, நாடாளும் அரசனுக்கும் பெருமையை அளிக்கிறது.

நன்றி-கணேசன் பாலகுரு ஆச்சாராயார்-கோவை...
********************
ஓதுதல் எனில் படித்தல், வாசித்தல் என்று பொருள்...அப்படி ஓதுபவர் ஓதுவார் ஆகிறார்...இவர்கள் சிவன் கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற திருமுறைத் துதிகளை இசையோடு ஓதுபவர் (பாடுபவர்) ஆவர்...இந்த சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இறைத்தொண்டர்கள்...சைவவேளாளர் குலத்தவர்களே ஓதுவார்களாயினர்...முற்காலத்தில் அரசர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர்...பல தலைமுறைகளாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களை சிவன் கோயில்களில் பாடி வந்தனர்
********************
மெதுவாக இடையை வளைத்து ஓர்  ஆசாமி சாமி முன்னே தேவாரம் பாடும் உரிமை கொண்டவர் (4)


மெதுவாக இடையை
= middle letters of மெதுவாக
= மெ(துவா)க = துவா

[வளைத்து=indicator for enclose]

வளைத்து ஓர் 
= துவா inside ஓர்
=ஓதுவார்

(ஆசாமி சாமி முன்னே) தேவாரம் பாடும் உரிமை கொண்டவர்
= ஓதுவார்
********************
Raghavan MK said…
ஆசாமி
Author may pl clarify the significance of this word in the clue pl
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 25-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
(இருமுறை) பூசம் விசேஷமாகும் சமயத்தில் குதிக்கும் விதம் (2)
**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 25-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.
அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.

**********************
(இருமுறை) பூசம் விசேஷமாகும் சமயத்தில் குதிக்கும் விதம் (2)

பூசம் விசேஷமாகும் சமயம்
= தை
(தைப்பூசம்--> தை மாதம்)

(இருமுறை)= தை தை

குதிக்கும் விதம் = தை தை
**********************
பூப் பூக்கும் மாசம் தை மாசம்..ம்.ம்.ம்.
ஊரெங்கும் வீசும் பூ வாசம்...ம்...ம்...ம்..
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரம் நேரம் இந்நேரம்...(பூப் பூக்கும்)

(வருஷம் 16)

**********************
ஆடலும் பாடலும்

குழந்தை குதித்து விளையாடுகிறது.
தை தையென்று குதிக்கும் குழந்தையின் ஆடலுக்கு ஏற்ற பாடலைத் தாய் பாடுகிறாள்.

தை தை மாணிக்கம் தஞ்சாவூரு மாணிக்கம்
கோவில் சோறு மிஞ்சிப் பூடறது கூத்தாடடி மாணிக்கம்!
**********************
தை தை யென்று குதித்து மகிழ்வித்தவர்கள்!

[5/25, 06:00] Ramarao திரைக்கதம்பம்: தைதை
[5/25, 06:00] மீ.கண்ணண்.: தைதை
[5/25, 06:02] sankara subramaiam: தைதை
[5/25, 06:05] akila sridharan: தைதை
[5/25, 06:15] Dr. Ramakrishna Easwaran: தை தை
[5/25, 06:28] A D வேதாந்தம்: விடை= தை தை
[5/25, 06:32] Suba: Hello sir, தைதை
[5/25, 06:41] ஆர். நாராயணன்.: தைதை
[5/25, 06:43] Venkat UV: தை தை?
[5/25, 07:11] shanthi narayanan: தைதை
[5/25, 07:14] nagarajan: தைதை
[5/25, 07:37] Meenkshi: விடை: தைதை
[5/25, 08:34] prasath venugopal: தைதை
[5/25, 08:40] siddhan submn: தைதை
[5/25, 10:00] V N Krishnan.: VNK. தைதை
[5/25, 13:56] Rajalakshmi Krishnan: Thai,thai
[5/25, 19:28] N T Nathan: தைதை
[5/25, 19:31] balakrishnan: தை தை👌
[5/25, 20:31] பாலூ மீ.: தைதை
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 26-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

அளவை மீறா அம்மி காற்றில் மூழ்கியிருக்கும் (2)

**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 26-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
ஆடி காற்றில் அம்மியும்பறக்கும்!
-- பழமொழி!

ஆனால் இங்கு அம்மி காற்றில் மூழ்கியது!
**********************
அளவை மீறா அம்மி காற்றில் மூழ்கியிருக்கும் (2)

அம்மி காற்றில் மூழ்கியிருக்கும்
= விடை "அம்மி காற்றில்" மூழ்கியுள்ளது !
= [அம்]மிகா [ற்றில்]
= மிகா

அளவை மீறா = மிகா
**********************

*ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.*

ஆடி மாதம் அடிக்கும் காற்று அவ்வளவு வலுவாய் இருப்பதால் அம்மிக் கல்லும் பறந்து போகும். இதுவே எல்லோரும் அறிந்த விளக்கம். இதுவும் சொல் வழக்கில் வார்த்தைகள் மருவி விட்டன

*ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்*

இதுதான் சரியான அர்த்தம். ஆடியில் காற்றடித்தால் அம்மை நோயும் பறந்து போகும் என்பதே பொருள். ஆடிக்கு முன் ஆவணி மாதத்தில் வெயிலின் சூட்டினால் அம்மை நோய் ஏற்படும். ஆனால் ஆடி மாதத்தில் காற்று அடிப்பதால் சூடு தணியும். அம்மை நோய் போய் விடும். இதுவே விளக்கம்.
**********************
அம்மியை மூழ்கடித்தவர்கள்.
**********************

[5/26, 06:01] balakrishnan: மிகா
[5/26, 06:02] Ramarao : மிகா
[5/26, 06:06] Dhayanandan: மிகா
[5/26, 06:06] sathish: மிகா!
[5/26, 06:14] மீ.கண்ணண்.: மிகா
[5/26, 06:17] Venkat UV: மிகா?
[5/26, 06:25] பாலூ மீ.: மிகா.
[5/26, 06:25] N T Nathan: மிகா
[5/26, 06:26] Suba: Hello sir, மிகா
[5/26, 06:41] Meenkshi: விடை: மிகா
அம் மிகா ற்றில்
[5/26, 06:48] Ramki Krishnan: Migaa
[5/26, 07:19] chithanandam: மிகா
[5/26, 07:24] prasath venugopal: மிகா
[5/26, 08:03] ஆர். நாராயணன்.: ஆர்.நாராயணன். மிகா
[5/26, 09:13] Dr. Ramakrishna Easwaran: மிகா
[5/26, 09:29] siddhan submn: மிகா
[5/26, 09:35] Rajalakshmi Krishnan: Mighaa
[5/26, 14:59] shanthi narayanan: மிகா
**********************
M Balachandran said…
ஆடிக்கு முன் ஆனி என்று இருக்கவேண்டும்.
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 27-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
உடை மடிப்பு கலையாத தகாத சங்கமம் மயக்கத்தில் மதம் ஒழிக்கும் (5)
**********************
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 27-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
உடை மடிப்பு கலையாத தகாத சங்கமம் மயக்கத்தில் மதம் ஒழிக்கும் (5)

தகாத சங்கமம் மதம் ஒழிக்கும்
= தகாத சங்கமம்- மதம்
= தகா(த) சங்க(மம்)
= தகாசங்க
மயக்கத்தில் = anagram indicator for தகாசங்க
= கசங்காத
= உடை மடிப்பு கலையாத
**********************
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்
(நா.முத்துநிலவன்)
**********************
கசங்காமல் வலிக்கிறது.... 
கசங்காமல் வலிக்கிறது.... 
இதயத்தில் 
அவள் நினைவுகள்..,...
( balavisu)
**********************
விடை யளித்தவர்கள்


[5/27, 05:55] Ramarao திரைக்கதம்பம்: கசங்காத

[5/27, 05:55] prasath venugopal: கசங்காத

[5/27, 05:55] chithanandam: கசங்காத

[5/27, 05:56] sathish: கசங்காத

[5/27, 05:58] Suba: Hello sir, கசங்காத

[5/27, 06:00] nagarajan: கசங்காத

[5/27, 06:03] மீ.கண்ணண்.: கசங்காத

[5/27, 06:07] N T Nathan: கசங்காத

[5/27, 06:08] balakrishnan: கசங்காத

[5/27, 06:20] உஷா, கோவை: கசங்காத
.
[5/27, 06:26] A D வேதாந்தம்: விடை= கசங்காத

[5/27, 06:27] பாலூ மீ.: கசங்காத.

[5/27, 06:31] Dr. Ramakrishna Easwaran: கசங்காத

[5/27, 06:37] V N Krishnan.: கசங்காத

[5/27, 06:38] ஆர். நாராயணன்.: கசங்காத

[5/27, 06:55] Meenkshi: விடை:கசங்காத

[5/27, 09:54] siddhan submn: கசங்காத
[5/27, 12:21] Bharathi: கசங்காத

[5/27, 14:03] akila sridharan: கசங்காத

[5/27, 16:25] Dhayanandan: கசங்காத
[5/27, 17:23] balagopal: தென்றல் புதிர்
தகாத சங்கமம் (மயக்கத்தில்) மதம் ஒழிக்கும்.
தகாத சங்கமம் _மதம்.
தகாசங்க. கசங்காத.
உடை மடிப்பு கலையாத.
கசங்காத.

**************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 28-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
வழி நடுவில் துளி மண் கோல் (4)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 28-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
தண்டம்
தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)MEANING
கோல் ; தண்டாயுதம் ; அபராதம் ; தண்டனை ; குடைக்காம்பு ; உலக்கை ; படகு துடுப்பு ; ஓர் அளவை ; உடம்பு ; படை ; படை வகுப்புவகை ; திரள் ; வரி ; கருவூலம் ; இழப்பு ; யானைகட்டும் இடம் ; யானை செல்லும் வழி ; ஒறுத்து அடக்குகை ; வணக்கம் ; ஒரு நாழிகை நேரம் ; செங்கோல்தொடர்புடையவை-
**********************

வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு.

சிவனின் வில் - பிநாகம்

கண்ணனின் வில் - சாரங்கம்

இராமனின் வில் - கோதண்டம்

கர்ணனின் வில் - விஜயம்

அருச்சுனனின் வில் - காண்டீபம்

மன்மதனின் வில் - கரும்பு

**********************



வழி நடுவில் துளி மண் கோல் (4)

வழி = தடம்
துளி மண் = (ம)ண் = ண்
நடுவில் = ண் --->தடம்
= தண்டம்
= கோல்
**********************
*சாம, தான, பேத, தண்டம் என்றால் என்ன?*

நமக்கு எதிராக உள்ளோரை வெல்ல பின்வரும் நான்கு படிநிலைகளை ஒவ்வொன்றாக முயற்சிக்க வேண்டும் என்பது பொருள். எந்தப் படிநிலையில் வெற்றி கிடைத்தாலும் அதற்கு அடுத்த படிநிலைக்குச் செல்லத் தேவையில்லை.

சாமம் - சமாதானம் கூறியும், இனிய சொற்களைக் கொண்டு பேசியும் முயற்சிக்க வேண்டும். இது முதல் படிநிலை

தானம் - தானம் கொடுத்து வழிக்குக் கொண்டு வருதல் - இது இரண்டாம் படிநிலை

பேதம் - ஒதுக்கி வைத்தல் அல்லது புறக்கணித்தல், மிரட்டுதல் போன்றவற்றாலான முயற்சி - இது மூன்றாவது படிநிலை

தண்டம் - இது அகிம்சைக்கெதிரான வழி. அதாவது வன்முறையைக் கையாள்வது. தடி கொண்டு அடிப்பது போன்ற உத்தியைக் கையாள்வது - இது நான்காவது நிலை

இதையே பண்டைய வேதங்கள் சாம, தான, பேத , தண்டம் என்று கூறியுள்ளதாகச் சொல்வர்.
**********************
விடையளித்தவர்கள் பட்டியல்
**********************

[5/28, 06:08] akila sridharan: தண்டம்

[5/28, 06:13] balakrishnan: தண்டம்

[5/28, 06:14] Ramarao : தண்டம்

[5/28, 06:40] Meenkshi: இன்றைய விடை:தண்டம்(தடம்+ண்)

[5/28, 06:45] ஆர்.நாராயணன். .தண்டம்

[5/28, 07:08] sridharan: தண்டம். தடம்+ண்

[5/28, 07:35] nagarajan: தண்டம்

[5/28, 09:13] Dhayanandan: தண்டம்

[5/28, 10:18] siddhan submn: தண்டம்

[5/28, 11:43] Rajalakshmi Krishnan: Maduvil

[5/28, 12:40] N T Nathan: தண்டம்
**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 29-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
ஒரு வரிக்குள் அடங்கிய இரண்டாம் வைரத்தால் மண்ணுக்குள் மறைந்த பாதை (5)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************t
Raghavan MK said…

********************
*இன்றைய புதிர்!*( 29-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

ஒரு சுங்க வரி என்பது இறக்குமதி அல்லது (வழக்கமாக) அல்லது ஏற்றுமதி (வழக்கத்திற்கு மாறாக) பொருட்களின் மீதான வரி.

**********************
*ஒரு வரிக்குள் அடங்கிய இரண்டாம் வைரத்தால் மண்ணுக்குள் மறைந்த பாதை (5)*
ஒரு வரி = சுங்கம்
இரண்டாம் வைரத்தால்
= வைரத்தால் இதில் 2ம் எழுத்து
= ர

ஒரு வரிக்குள் அடங்கிய இரண்டாம் வைரத்தால்
= ர inside சுங்கம்
= சுரங்கம்

= மண்ணுக்குள் மறைந்த பாதை
**************
சுரங்கம்


உன் கண்கள் 
என்ன 
பாதாளச் சுரங்கமோ... 

உள்ளே செல்ல 
செல்ல 
ஒன்றுமே தெரியவில்லை.... 

உன் பார்வைகள் 
என்னை 
சிலைகளாக 
செதுக்கி வைத்திருந்த 
இடங்களை தவிர .......

எழுதியவர் : அன்பு
**************
சுரங்கத்தில் நுழைந்து வந்தவர்கள்!
**************

[5/29, 06:01] balakrishnan: சுரங்கம்🤣👌🙏🏻

[5/29, 06:01] Ramarao : சுரங்கம்

[5/29, 06:08] V N Krishnan.: வாஞ்சி புதிர். சுரங்கம்

[5/29, 06:13] மீ.கண்ணண்.: சுரங்கம்

[5/29, 06:15] உஷா, கோவை: சுரங்கம்

[5/29, 06:26] பாலூ மீ.: சுரங்கம்.

[5/29, 06:36] ஆர். நாராயணன்.: சுரங்கம்.

[5/29, 06:36] Ramki Krishnan: Churangam

[5/29, 06:38] N T Nathan: சுரங்கம்

[5/29, 06:40] sankara subramaiam: சுரங்கம்

[5/29, 06:45] akila sridharan: சுரங்கம்

[5/29, 06:52] Meenkshi: விடை: சுரங்கம்

[5/29, 07:36] chithanandam: சுரங்கம்

[5/29, 07:41] prasath venugopal: சுரங்கம்

[5/29, 07:49] nagarajan: சுரங்கம்

[5/29, 08:45] Dr. Ramakrishna Easwaran: சுரங்கம்.
வரி=சுங்கம்
2வது வைரம் = ர

[5/29, 09:15] siddhan submn: சுரங்கம் (சுங்கம் + ர )

[5/29, 09:47] Rajalakshmi Krishnan: Surangam
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 30-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

மூன்றில் ஒரு பகுதி நூறில் அடங்க சூளுரை (4)

**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய புதிர்!*( 30-05-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
*************************
மூன்றில் ஒரு பகுதி நூறில் அடங்க சூளுரை (4)

மூன்றில் ஒரு பகுதி
= ப[குதி] ……(மூன்றில் ஒரு எழுத்து)
= ப
நூறு = சதம்

மூன்றில் ஒரு பகுதி நூறில் அடங்க = ப ---> சதம்
= சபதம்

= சூளுரை
*************************
விடையளித்தோர் பட்டியல்
*************************
[5/30, 05:59] மீ.கண்ணண்.: சபதம்

[5/30, 06:00] Ramarao : சபதம்

[5/30, 06:02] balakrishnan: சபதம்
🙏🏻👌🌷

[5/30, 06:04] Ramki Krishnan: Sabatham

[5/30, 06:04] V N Krishnan.: VNK சபதம்

[5/30, 06:04] Dhayanandan: சபதம்

[5/30, 06:12] akila sridharan: சபதம்

[5/30, 06:12] உஷா, கோவை: சபதம்

[5/30, 06:17] sridharan: சபதம்

[5/30, 06:32] sankara subramaiam: சபதம்

[5/30, 06:56] Meenkshi: விடை:சபதம்

[5/30, 07:05] prasath venugopal: சபதம்

[5/30, 07:24] N T Nathan: சபதம்

[5/30, 07:31] Suba: Hello sir , சபதம்
[5/30, 07:32] shanthi narayanan: சபதம்

[5/30, 07:35] Bharathi: சபதம்

[5/30, 07:38] Viji - Kovai: 30.05.2020 புதிர்
விடை=சபதம்
நூறு=சதம்
மூன்றில் ஒரு பகுதி=ப

[5/30, 07:46] nagarajan: சபதம்

[5/30, 08:07] பாலூ மீ.: சபதம்

[5/30, 08:35] Dr. Ramakrishna Easwaran: சபதம்
(சதம் +ப)*

[5/30, 08:46] Rajalakshmi Krishnan: Sabatham
.
[5/30, 08:56] ஆர். நாராயணன்.: சபதம்

[5/30, 10:25] usha: சபதம்

[5/30, 11:02] siddhan submn: சபதம்
[5/30, 15:01] balagopal: நூறு.சதம்
மூன்றில் ஒரு பகுதி.ப
ப நூறில் அடங்க.சபதம்.
சுளுரை.சபதம்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்