Skip to main content

விடை 4087

இன்று காலை வெளியான புதிர்:
உயர் பதவியில் இருப்பவர்க்கு உரியது வள்ளுவருக்கு 
இல்வாழ்க்கையாக  இருக்கலாம் (5)

அதற்கான விடை:  அதிகாரம்  (இல்வாழ்க்கை என்பது திருக்குறளின் 133 அதிகாரங்களில் ஒன்று)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.


Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
திருக்குறள்

இல்வாழ்க்கை

பால்: அறத்துப்பால். 
இயல்:இல்லறவியல். 
அதிகாரம்:இல்வாழ்க்கை.
************************
அதிகார விளக்கம்

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்புக்கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். எதில் இருந்து கற்பதன் மூலமும், இல்வாழ்வில் இருந்துதான் அதிகமாகக் கற்க முடியும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.

(சிவயோகி சிவகுமார்)
*********************
குறள் 45: 

_அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை_
_பண்பும் பயனும் அது._

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
*********************
_உயர் பதவியில் இருப்பவர்க்கு உரியது வள்ளுவருக்கு   இல்வாழ்க்கையாக  இருக்கலாம் (5)_

_உயர் பதவியில் இருப்பவர்க்கு உரியது_ = *அதிகாரம்*

_வள்ளுவருக்கு   இல்வாழ்க்கையாக  இருக்கலாம்_
= *அதிகாரம்*
********************
*_அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை_*

இன்பம் நோக்கிய இல்வாழ்க்கை, அன்பால் தூண்டப்பட்டு அறத்தில் மலர வேண்டும் என்று எண்ணிய வள்ளுவர் "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று இல்வாழ்க்கையை இல்லறமாக்கினார். குடும்ப வாழ்க்கை குறிக்கோள் மிக்க வாழ்க்கை ஆனது.
**********
இல்லில் மனைவியோடு கூடி வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையின் சிறப்பும் இல்வாழ்வார் மாண்பும் சொல்லப்படுகிறது.

*இல்வாழ்க்கை அதிகாரம்* மனைவி மக்களோடு குடும்பம் நடத்தி, அறம் செய்யும்முறையை விளக்குகிறது. இல்லறமானது மற்ற எவ்வகைப்பட்ட அறங்கட்கும் ஆதாரமானது என்கிறது. இல்வாழ்க்கையானது இல்வாழ்தல் என்ற அளவில் நில்லாது இல்வாழ்தலின் சிறப்பையும் கூறுவது.

இல்வாழ்க்கை குடும்பத்திற்காக வாழும் வாழ்க்கை எனவும் உலகுக்காக வாழும் வாழ்க்கை எனவும் இரு வகைப்படும். குடும்ப வாழ்விலிருந்து முகிழ்ப்பதே உலக வாழ்க்கை. இல்லறத்தை நடத்துவது இன்ப நுகர்ச்சிக்காக மட்டும் அன்று, அது பலருக்கும் துணையாக நின்று உதவுதற்குரிய அறம் செய்வதற்கும் ஆகும்.
மாந்தர் தாம், தமக்கு எனத் தன்னலவாழ்வு வாழாமல் துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறம் எனப்படுவது.
********************
💐🙏🏼💐
Raghavan MK said…
*********************
*இன்றைய புதிர்!*( 18-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************

வெளி ஆடம்பரம் மெய்யின்றி எமனோடு வரும் (3)

*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 18-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************
நாலடியார்

துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க
அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம்
சகடக்கால் போல வரும்.             

பொருள்

எருது பூட்டி உழுது பெற்ற குற்றமற்ற செல்வம் தோன்றியது முதலே பலரோடும் கூடிப் பகிர்ந்து உண்ணுதல் வேண்டும்.

செல்வமானது அகலமாகக் கால் பரப்பிக்கொண்டு யாரிடத்திலும் தங்கியிருப்பது இல்லை.

ஓடும் வண்டிச் சக்கரம் போல இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

*********************
வெளி ஆடம்பரம் மெய்யின்றி எமனோடு வரும் (3)
வெளி ஆடம்பரம் = பகட்டு
மெய்யின்றி = பகட்டு- ட் (ட் மெய்யெழுத்து)
= பகடு

எமனோடு வரும்
= பகடு ( எருமை)
*********************
Dr. Ramakrishna Easwaran அவர்கள் பகடு=எருமை, எமன் வாகனம் என்பதற்கு திருப்புகழ் மேற்கோள் ஒன்று அனுப்பியுள்ளார். படித்து ரசிக்கவும். http://kuganarul.blogspot.com/2018/05/blog-post_12.html?m=1
*********************
விடையளித்தோர் பட்டியல்
*********************
[5/18, 06:03] Ramarao திரைக்கதம்பம்: பகடு

[5/18, 06:10] balakrishnan: 🙏🏻பகடு🙏🏻

[5/18, 06:21] Suba: Hello sir, பகடு

[5/18, 06:37] sridharan: பகடு. (காளை)
[
[5/18, 06:53] sankara subramaiam: பகடு

[5/18, 07:18] prasath venugopal: பகடு

[5/18, 07:21] nagarajan: பகடு

[5/18, 07:21] Meenkshi: விடை:பகடு(பகட்டு--ட்)
பகடு=எருது

[5/18, 07:50] ஆர். நாராயணன். பகடு ( பகட்டு - ட்) எருமை

[5/18, 07:52] A D வேதாந்தம்: விடை= பகடு

[5/18, 13:41] Rajalakshmi Krishnan: Pagadu__pagattu_t

[5/18, 15:49] Dr. Ramakrishna Easwaran
Vanchi's archives. விடை: பகடு. வெளி ஆடம்பரம்= பகட்டு, மெய்யின்றி= ட் என்ற மெய்யெழுத்து இன்றி, பகடு= எருமை - எமனுடன் வருவது.

[5/18, 17:11] Dhayanandan: பகடு￰ ( நன்றி கழகத் தமிழ் அகராதி)

[5/18, 19:59] sathish: பகடு
*********************
உஷா said…
பகடு என்றால் எருது(காளை)தானே. எமனுடன் வருவது எருமை அல்லவா?
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 19-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************
வரையறுக்கப்பட்ட அளவு உமட்டும் கதையைக் கேட்கும்போது கொட்டுவதை மறந்துவிடு (3)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 19-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************
மட்டு, 
பெயர்ச்சொல்.
எல்லை
கள்
*********************
வரையறுக்கப்பட்ட அளவு உமட்டும் கதையைக் கேட்கும்போது கொட்டுவதை மறந்துவிடு (3)

கதையைக் கேட்கும்போது கொட்டுவது = உம்
உமட்டும் --> இதில் "உம்" ஐ மறந்துவிடு
= உமட்டும்- உம்
= மட்டு
= வரையறுக்கப்பட்ட அளவு (எல்லை)
*********************
மட்டற்ற மகிழ்வுடன் உம் கொட்டியவர்கள்

[5/19, 06:05] Ramarao : மட்டு
[5/19, 06:07] balakrishnan: மட்டு
[5/19, 06:48] Meenkshi: விடை:மட்டு
[5/19, 06:58] Suba: Hello sir, மட்டு
[5/19, 07:11] prasath venugopal: மட்டு
[5/19, 07:15] shanthi narayanan: மட்டு
[5/19, 07:15] nagarajan: மட்டு
[5/19, 07:24] மீ.கண்ணண்.: மட்டு
[5/,,.: 19/5/20 ஆர் நாராயணன்
மட்டு ( உமட்டும் - உம்)
[5/19, 09:09] பாலூ மீ.: புதிர் விடை : மட்டு.
[5/19, 10:50] N T Nathan: மட்டு
[5/19, 13:33] akila sridharan: மட்டு
[5/19, 14:39] Bharathi: மட்டு
[5/19, 14:41] Dr. Ramakrishna Easwaran: 19.5.20 விடை: மட்டு (வரையறுக்கப்பட்ட அளவு) கதை சொல்லும்போது கொட்டுவது=உம், மறந்து விடு= deletion indicator, உமட்டும்-உம்= மட்டு
[5/19, 18:30] sankara subramaiam: மட்டு
Raghavan MK said…
A peek into today's riddle!


*********************
*இன்றைய புதிர்!*( 20-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
***********************
புதிய மலர்ச்சியை எய்ய பொறியலில் இரண்டை நீக்கி வடை போட்டுப் புரட்டவும் (5)
***********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 20-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
***********************
புதிய மலர்ச்சியை எய்ய பொறியலில் இரண்டை நீக்கி வடை போட்டுப் புரட்டவும் (5)

பொறியலில் இரண்டை நீக்கி
= பொ(றி)யலி(ல்)
= பொயலி

வடை போட்டுப் புரட்டவும்
= பொயலி+வடை
= பொலிவடைய

= புதிய மலர்ச்சியை எய்ய
***********************
பொலிவுடன் வடையை புரட்டியவர்கள்!
************
[5/20, 06:20] Ramarao திரைக்கதம்பம்: பொலிவடைய

[5/20, 06:23] Suba: Hello sir, பொலிவடைய

[5/20, 06:28] balakrishnan: பொலிவடைய👌🙏🏻

[5/20, 06:29] sathish: பொலிவடைய

[5/20, 06:44] V N Krishnan.: வாஞ்சி புதிர். பொலிவடைய

[5/20, 06:45] மீ.கண்ணண்.: பொலிவடைய

[5/20, 06:46] ஆர். நாராயணன்.: . பொலிவடைய

[5/20, 06:49] sankara subramaiam: பொலிவடைய

[5/20, 06:49] Venkat UV: பொலிவடைய? 🙏🏽 [பொ(றி)யலி(ல்) இரண்டு நீக்கி + வடை]
[
[5/20, 07:02] Meenkshi: இன்றைய விடை:பொலிவடைய

[5/20, 07:05] shanthi narayanan: பொலிவடைய

[5/20, 07:26] nagarajan: பொலிவடைய

[5/20, 08:24] siddhan submn: பொலிவடைய
பொலிய + வடை

[5/20, 10:28] N T Nathan: பொலிவடைய

[5/20, 06:29] sathish: பொலிவடைய

[5/20, 14:00] Dr. Ramakrishna Easwaran: 20.5.20 விடை: பொலிவடைய (புதிய மலர்ச்சியை எய்ய). பொறியலில், றி & ல் நீக்கினால், எஞ்சுவது பொ ய லி. இதனுடன் 'வடை' கலந்தால் வருவது வடைகறி அல்ல, பொலிவடைய!
[5/20, 14:01] Dr. Ramakrishna Easwaran: பொரியல் என்பதே சரி அல்லவா
[5/20, 15:02] Dr. Ramakrishna Easwaran: 'எய்ய' என்பது அம்பு அல்லது ஈட்டி போன்றவற்றை வீசுவதை / செலுத்துவதைக் குறிப்பது. இந்தப் புதிரில் குறிப்பிடப்படும் பொருளுக்கு 'எய்திட' என்ற சொல்லே பொருத்தமானது. 'அடைய' என்ற அர்த்தம்
[5/20, 16:10] M K Raghavan: ஆம்! பொரியல் என்பதே சரி! ஆயின் இதனால் புதிரின் விடை காண்பதில் மாற்றம் ஏதுமில்லை!

[5/20, 16:21] பாலூ மீ.: பொலிவடைய.
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 21-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
***********************
பெற்ற குழந்தையை வளர்க்காதவள் தேர்தல் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்து (3)
***********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 21-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
பெற்ற குழந்தையை வளர்க்காதவள் தேர்தல் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்து (3)

தேர்தல் தலைமை
= தேர்தல் முதலெழுத்து
= தே

பொறுப்பை ஏற்று நடத்து
= வகி
[வகி- வகித்தல் நிர்வகி, 
பொறுப்பு வகி, 
தலைமை வகி]

பெற்ற குழந்தையை வளர்க்காதவள்
= தே+வகி
= தேவகி
***********************
தேவகி வசுதேவரின் மனைவியும், கிருஷ்ணரின் தாயாரும் ஆவார். மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் ஆவார்.

இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் கம்சனைக் கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.

எட்டாவததாக பிறந்த குழந்தை
கிருஷ்ணரை கோகுலத்தில் உள்ள, நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்துவிட்டு அதற்கு பதிலாக அவருக்கு பிறந்த பெண் குழந்தையை கொண்டுவந்து தன் பிள்ளை எனக்கூறினாள் தேவகி!
***********************
தேவகியைக் கண்டவர்கள்!

[5/21, 06:01] Ramarao : தேவகி

[5/21, 06:07] akila sridharan: தேவகி

[5/21, 06:15] Suba: Hello sir, தேவகி

[5/21, 06:17] உஷா, கோவை: தேவகி

[5/21, 06:26] மீ.கண்ணண்.: தேவகி

[5/21, 06:32] ஆர். நாராயணன்.: தேவகி

[5/21, 06:35] balakrishnan: தேவகி👌🙏🏻

[5/21, 07:00] chithanandam: தேவகி

[5/21, 07:02] Ramki Krishnan: Devaki

[5/21, 07:25] Meenkshi: விடை:தேவகி.
தேர்தல் தலைமைப் பொறுப்பிலேயே உழன்றேன்😁

[5/21, 07:32] nagarajan: தேவகி

[5/21, 08:30] siddhan submn: தேவகி (தே)ர்தல் + வகி

[5/21, 08:45] N T Nathan: தேவகி

[5/21, 08:56] prasath venugopal: தேவகி
[5/21, 09:54] Dr. Ramakrishna Easwaran: 21.5.20: தேவகி.
தே:
தேர்தல் தலைமை= 'தேர்தல்' என்பதில் முதல் எழுத்து.

பொறுப்பை ஏற்று நடத்து= வகி. தே+வகி

தேவகி பெற்ற கண்ணனை யசோதை அல்லவா வளர்த்தாள்!

[5/21, 10:27] V N Krishnan.: இன்றைய புதிர். தேவகி!

[5/21, 06:01] Ramarao திரைக்கதம்பம்: தேவகி

[5/21, 14:27] sankara subramaiam: தேவகி
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 22-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
*மோசமானவன் முன்னேயிருப்பவன் இறைவன் எழுந்தருளிய இடத்தில் பாதி (3)*
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 22-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
சன்னதியில் கட்டும் கட்டி, வந்தோமப்பா ஐயப்பா 
சபரிமலை காடுதேடி, வாரோமப்பா ஐயப்பா 
கட்டுமுடி ரெண்டு கட்டி, வந்தோமப்பா ஐயப்பா 
காந்தமலை ஜோதிகாண, வாரோமப்பா ஐயப்பா…
**********************
சன்னிதி
சந்நிதி = சன்னதி = ஆலயம் = கோவில் = கோயில்
**********************
மோசமானவன் முன்னேயிருப்பவன் இறைவன் எழுந்தருளிய இடத்தில் பாதி (3)

முன்னேயிருப்பவன் = நீ

இறைவன் எழுந்தருளிய இடத்தில் பாதி
= சன்னிதி யில் பாதி
= சன்

மோசமானவன்
= நீ+சன்
= நீசன்
**********************
சன்னிதி என எழுதுவதா, சன்னதி என எழுதுவதா என்னும் குழப்பம் அடிக்கடி வருவதுண்டு

சன்னிதி அல்லது சந்நிதி என்பது சரி.

தெய்வத்தின் சாந்நித்யம் / சான்னித்யம் (இருப்பு) இருக்கும் இடம் சன்னிதி.

சான்னித்யத்துடன் தொடர்புகொண்ட சன்னிதானம் என்ற சொல்லை நினைவுபடுத்திக்கொண்டால் சன்னதி என எழுதக் கூடாது என்பது புரியும்.
****************
‘ன’, ‘ந’ பயன்பாடுகள்

சன்னிதியா, சந்நிதியா?
அன்னியனா, அந்நியனா?

வடமொழியிலிருந்து வரும் சொற்களுக்குப் பொதுவாக ‘ந’ பயன்படுத்துவதே பொருத்தமானது. ஏனென்றால் வடமொழியில் ந மட்டும்தான் இருக்கிறது. ‘ன’ இல்லை. ஆனால், தமிழில் தொடக்கத்தில் மட்டுமே ந என்னும் எழுத்து பயன்படுத்தப்படும். சொல்லின் நடுவில் ந வருவதில்லை. ந் என்று மெய்யெழுத்தாகவே வரும் (தந்த, வந்த, சிறந்த…) எனவே சொல்லுக்கு நடுவில் வரும் ந ஒலியை ன என்னும் எழுத்தைப் பயன்படுத்தியே எழுதலாம்.
**********************
[5/22, 06:05] Ramarao : நீசன்

[5/22, 06:06] Suba: Hello sir, நீசன்

[5/22, 06:07] sathish: நீசன்

[5/22, 06:11] balakrishnan: 🙏🏻நீசன்🤪

[5/22, 06:52] sankara subramaiam: நீசன்
முன்னேயிருப்பவன் - நீ
பாதி சன்னதி - சன்

[5/22, 07:26] nagarajan: நீசன்

[5/22, 08:13] பாலூ மீ.: நீசன்.

[5/22, 08:14] மீ.கண்ணண்.: விடை: நீ+சன்னிதி {பாதி} —->நீசன்

[5/22, 09:02] Dr. Ramakrishna Easwaran: நீசன். முன்னேயிருப்பவன்= நீ, சன்னிதியில் பாதி

[5/22, 09:45] Meenkshi:
விடை: நீசன்
முன்னேயிருப்பவன் தெரியவெகுநேரம்.சன்னிதி தெரிந்தும்

[5/22, 09:53] ஆர். நாராயணன்.: நீசன் முன்னேயிருப்பவன் = நீ
சன்னிதி யில் பாதி சன்,
மோசமானவன் = நீசன்

[5/22, 17:12] V N Krishnan.:
நீசன்! நீ+ சன்(னிதி)

[5/22, 19:13] siddhan submn: நீசன்
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 23-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
பற்றை விட்டவர்க்கும் வெற்றிலைமேல் பற்றை விடாதவர்க்கும் அடையாளம் (2)
**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 23-05-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
பற்றை விட்டவர்க்கும் வெற்றிலைமேல் பற்றை விடாதவர்க்கும் அடையாளம் (2)

பற்றை விட்டவர்க்கு அடையாளம் = காவி ( உடை)
வெற்றிலைமேல் பற்றை விடாதவர்க்கும் அடையாளம்
= காவி (ப்பல்)
**********************

[5/23, 06:06] Suba: Hello sir,
[5/23, 06:08] Ramarao : காவி
[5/23, 06:09] balakrishnan: காவி
[5/23, 06:14] V N Krishnan.: காவி( காவி நிறம் உடை. காவி நிறம் பற்கள்)
[5/23, 06:31] A D வேதாந்தம்: விடை= காவி
[5/23, 06:32] மீ.கண்ணண்.: காவி
[5/23, 06:36] sankara subramaiam: காவி
[5/23, 06:41] akila sridharan: காவி.
[5/23, 07:28] பாலூ மீ.: காவி.
[5/23, 07:35] nagarajan: காவி
[5/23, 07:35] Meenkshi: விடை:காவி
[5/23, 08:23] Viji - Kovai:
விடை: காவி
[5/23, 08:28] ஆர். நாராயணன்.: காவி
[5/23, 09:25] siddhan submn: காவி
[5/23, 12:24] shanthi narayanan: காவி
[5/23, 14:11] N T Nathan: காவி
[5/23, 14:57] Dr. Ramakrishna Easwaran: காவி (double definition)
[5/22, 13:53] M K Raghavan: Thanks
[5/23, 15:42] prasath venugopal: காவி?
[5/23, 17:53] Rajalakshmi Krishnan: Kaavi
[5/23, 19:42] Venkat UV: காவி 🙏🏽

**************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்