Skip to main content

விடை 4086

இன்று காலை வெளியான வெடி
எதிர்பார்ப்புடன்  சக்தி வந்து ஆட பக்தன் இறுதியாக மயக்கம் (5)


அதற்கான விடை : ஆவலுடன் = வலு + ஆட + ன்
வலு = சக்தி
ன் = (பக்த)ன்
சக்தி வந்து ஆட என்றாலே "ஆவலுட" என்று ஆகும். அதனால் "மயக்கம்" தேவையில்லை என்கிறார் கேசவன்.
சாமி வந்து ஆடி முடிந்த பின் பக்தர்கள் மயங்கி விழுவதுதானே நடக்கும் என்று எழுதிவிட்டேன்.
இவ்வார வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
உதிரிவெடியின் Lockdown விரைவில் தளர்த்தப்படும் நாளை எதிர்பார்த்து மயக்கத்தில் இருக்கும் பக்தர்களில் ஒருவன் நான்.....
அருள் புரிவீர்! 🙏
*********************
எதிர்பார்ப்பே இல்லாமல் கடைசி பக்கத்தினை முடிக்கும்போது,
ஆவலுடன் வந்து முதல் பக்கத்தை புரட்டுகிறாய்...
*********************
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

படம்: வசந்த மாளிகை
*********************
எதிர்பார்ப்புடன்  சக்தி வந்து ஆட பக்தன் இறுதியாக மயக்கம் (5)

சக்தி வந்து ஆட = வலு+ஆட
பக்தன் இறுதியாக= ன்
மயக்கம் = Anagram of வலு+ஆட+ன்
= ஆவலுடன்
= எதிர்பார்ப்புடன்
*********************
ஒவ்வொரு பொழுதும் உன்
வரவை எண்ணியே விடிகிறதே...
என் வாழ்விற்கு
வெளிச்சம் தந்தவளே நீ தான்...
மறுபடியும் என்னை
இருளில் தள்ளிவிடாதே...

நீ வந்து குடியிருக்க என் மனமும்...
கோலமிட என் வாசலும்...
ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது
நீ வருவாய் என...

-(M. சுபி)
**************************
Whatsapp -9008746624
புதிராடும்களம்
**************************
R. Padma said…
Dear Vanchi,
Due to lockdown people have forgotten to notice that today is a Sunday. That's why very few have answered. At least till the lockdown challenge us with a udhiri vedi every morning, please. We are not keen on solving an old one
R. Padma said…
Dear Vanchi,
Due to lockdown people have forgotten to notice that today is a Sunday. That's why very few have answered. At least till the lockdown challenge us with a udhiri vedi every morning, please. We are not keen on solving an old one
Raghavan MK said…
*********************
*இன்றைய புதிர்!*( 11-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
ஒரு மணிக்குப் பின் பறவைகளுக்கு உணவு இலச்சினை (4)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 11-05-20)
from "Vanchi's archive -2009" (தென்றல்)*
*********************
ஒரு மணிக்குப் பின் பறவைகளுக்கு உணவு இலச்சினை (4)

ஒரு மணி=முத்து
பறவைகளுக்கு உணவு
= இரை
ஒரு மணிக்குப் பின் பறவைகளுக்கு உணவு
= முத்து+திரை
= முத்திரை
= இலச்சினை
*********************
*நாட்டிய முத்திரைகள்*

கை அசைவுகள் அல்லது 
முத்திரைகள் (சமசுகிருதம்: ஹஸ்தங்கள்) பரதநாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும். கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர். கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர். பரதநாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும். கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர்
*********************
*யோக முத்திரைகள்*

யோக முத்திரைகள்
என்பது இந்திய யோகக் கலையில் ஒரு பாகமாகும். யோக முத்ரா என்று சமஸ்கிருதமொழியில் கூறுகிறார்கள். முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருளாகும்.

இந்த முத்திரை பயிற்சிக்கு கை விரல்களே மூலதனமாகும். இம்முத்திரைகள் பற்றி தன்வந்திரி தன்னுடைய தன்வந்திரி வைத்தியம் 1000 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முத்திரைகளை தியானத்தின் போது பயன்படுத்தி ஞானம், உடல் பலம் ஆகியவற்றை பெருவதற்காக பயன்படுத்துகின்றார்கள்
Raghavan MK said…
முத்தான முத்திரை பதித்தவர்கள்!
*********************

[5/11, 06:04] உஷா, கோவை: முத்திரை
[5/11, 06:05] subs: Hello sir, முத்திரை
[5/11, 06:12] balakrishnan: முத்திரை. 🤣🙏🏻
[5/11, 06:19] shanthi narayanan: முத்திரை
[5/11, 06:41] prasath venugopal: முத்திரை
[5/11, 06:54] N T Nathan: முத்திரை (முத்து + இரை)
[5/11, 07:10] Dhayanandan: முத்திரை
[5/11, 07:27] Bharathi: முத்திரை
[5/11, 07:46] sankara subramaiam: முத்திரை
ஒரு மணி - முத்து
பறவைக்கு உணவு- இரை
முத்து + இரை
[5/11, 07:54] Meenkshi: விடை:முத்திரை
முத்து+இரை.
[5/11, 08:12] nagarajan: முத்திரை
[5/11, 08:18] +91 97406 99044: முத்திரை
[5/11, 08:25] sathish: முத்திரை. முத்து + இரை
[5/11, 11:19] siddhan submn: முத்திரை (முத்து + இரை)
[5/11, 14:11] chithanandam: முத்து இரை முத்திரை?
Raghavan MK said…
*********************
*இன்றைய புதிர்!*( 12-05-20)
from
Vanchi's archive - 2009 (தென்றல்)*
*********************

அசோகவனத்தில் ஆறுதல் தந்த பின்னல் முன்னே முறுக்கு (4)

*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!fy
*********************
*இன்றைய புதிர்!*( 12-05-20)
from
Vanchi's archive -2009(தென்றல்)*
*********************
ராமாயணத்தில் அதிகம் அறியப்படாத, அறிந்து கொள்ளாமலேயே தவறாகவும் பார்க்கப்பட்ட பாத்திரங்களுள் ஒருத்திதான் திரிசடை. திரிசடை ராவணனின் தம்பி விபீஷணன் மற்றும் சரமைக்குப் பிறந்த பெண். ராவணனைப் போலவே விபீஷணனும் சிறந்த சிவ பக்தன். திரிசடை என்றால்  வில்வம் என்று  பொருளுண்டு. (வடமொழியில்)

மூன்று இலைகளைக் கொண்டது வில்வக் கொத்து. அதுதான் திரி + சடை. வில்வம் சிவபெருமானுக்கு மிகவும் உரியது. அவருடைய  திரி-சூலமே, திரி-சடை ஆனது என்ற கதைகளும் உண்டு


*********************
அசோகவனத்தில் ஆறுதல் தந்த பின்னல் முன்னே முறுக்கு (4)

பின்னல் = சடை
முறுக்கு = திரி

பின்னல் முன்னே முறுக்கு
= திரி+சடை
= திரிசடை
=அசோகவனத்தில் ஆறுதல் தந்த
*********************
*ஆறுதல் சொன்ன திரிசடை*

அசோகவனத்தில், ராமரையே நினைத்தபடி அழுது கொண்டிருந்தாள் சீதை. அவளது பார்வை, குளவிக் கூடு ஒன்றிலிருந்து வெளிப்பட்ட குளவி ஒன்றின் மீது பட்டது. உடனே அவளது அழுகை அதிகமானது. அருகே இருந்த திரிசடை, ஆறுதல் சொல்லிவிட்டு, காரணம் கேட்டாள். கூட்டிற்குள் புழு வடிவில் போன குளவி, குளவியின் நினைவோடே உள்ளேயிருந்து குளவியாக மாறி விட்டது. அதுபோல, ராமரின் நினைவோடு எப்போதும் இருக்கும் நான், ராமராகவே மாறிவிட்டால், என் பதி, சீதைக்கு எங்கே போவார்? என நினைத்தேன். அழுதேன்! என்றாள், சீதை. இவ்வளவுதான்? ராமரையே நினைத்துக் கொண்டிருக்கும் நீ ராமராக மாறிவிட்டால், அங்கே உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கும் ராமர், சீதையாக (நீயாக) மாறிவிடுவார் அல்லவா...! அப்புறம் என்ன பிரச்னை? திரிசடை சொல்ல, ஆறுதல் அடைந்தாள் சீதை.
*************************
திரிசடை கண்டவர்கள்!
*************************
[5/12, 06:09] உஷா, கோவை: திரிசடை

[5/12, 06:19] balakrishnan: திரிசடை 🤣🙏🏻

[5/12, 06:21] மீ.கண்ணண்.: திரிசடை

[5/12, 06:24] A T வேதாந்தம்: விடை= திரிசடை/ வேதாந்தம்.

[5/12, 06:25] :பத்மாசனி புதிருக்கு விடை/ திரிசடை/

[5/12, 06:28] usha:
திரிஜடை

[5/12, 06:33] Meenkshi: விடை:திரிசடை.

[5/12, 06:39] ராமராவ்
- திரிசடை

[5/12, 06:46] chithanandam: திரிசடை
[
[5/12, 07:22] nagarajan: திரிசடை

[5/12, 07:28] N T Nathan: திரிசடை

[5/12, 07:37] sankara subramaiam: திரிஜடை

[5/12, 07:44] ஆர். நாராயணன்.
12/5/20 திரிஜடை

[5/12, 07:46] suba: Hello sir, திரிசடை

[5/12, 07:54] siddhan submn: திரிசடை

[5/12, 08:58] Dhayanandan: திரிசடை

[5/12, 14:04] shanthi narayanan: திரிசடை

[5/12, 20:30] Rajalakshmi Krishnan:
Thirijadai
***************************
Raghavan MK said…
*********************
*இன்றைய புதிர்!*( 13-05-20)
from
Vanchi's archive - 2009 (தென்றல்)*
*********************

விளிம்புகள் கொண்டு பாத்திரத்தை வழி (2)

*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
viji said…
பாதை
விளிம்புகள் பா+தை
வழி=பாதை
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 13-05-20)
from
Vanchi's archive -2009(தென்றல்)*
*********************
பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை...!
புதிய பாதை ஆகட்டும்...
*********************
விளிம்புகள் கொண்டு பாத்திரத்தை வழி (2)

விளிம்புகள் கொண்டு பாத்திரத்தை = பா[த்திரத்]தை
= பாதை

வழி = பாதை
*********************
வெற்றிப்பாதை

பிறர் சென்ற பாதையில்
நீ சென்றால் உன் கால்சுவடு
உனக்கே தெரியாது,

உனக்கென ஒருபாதை உருவாக்கு,
உன் உழைப்பை தினம் அதில் செயலாக்கு,

துயரங்கள் கண்டால் துறந்துவிடு,
தோல்விகள் கண்டால் மறந்துவிடு,

உழைக்கும் உளியாய் என்றும்
இருந்துவிடு,
வரலாறு தானே உன் பெயரை
செதுக்கிக் கொள்ளும்...

- குணா
********************
வெற்றிப்பாதையில் பயணித்தவர்கள்! !
********************
[5/13, 06:00] sathish: பாதை
[5/13, 06:01] balakrishnan: பாதை
[5/13, 06:04] உஷா, கோவை: பாதை
[5/13, 06:05] sridharan: பாதை.
[5/13, 06:06] N T Nathan: பாதை
[5/13, 06:12] suba: Hello sir, பாதை
[5/13, 06:33] Dhayanandan: பாதை
[5/13, 06:36] ஆர். நாராயணன்.: 13/5/20 விடை, பாதை
[5/13, 06:41] Meenkshi: விடை;பாதை.
[5/13, 06:44] வேதாந்தம்:
விடை= பாதை
[5/13, 06:45] பத்மாசனி
விடை= பாதை
[5/13, 06:27] Ramarao : விடை - paathai. - பாதை
[5/13, 06:51] sankara subramaiam: பாதை
[5/13, 06:56] Venkat UV: பாதை?
[5/13, 07:07] prasath venugopal: பாதை
[5/13, 07:21] nagarajan: பாதை
[5/13, 07:22] shanthi narayanan: பாதை
[5/13, 07:32] stat senthil: பாதை
[5/13, 07:32] Ramki Krishnan: Paathai
[5/13, 08:01] chithanandam: பாதை.
[5/13, 10:14] balagopal: பாதை.
[5/13, 12:10] Rajalakshmi Krishnan: Paadhai
[5/13, 20:20] பாலூ மீ.: விடை: பாதை
********************
Raghavan MK said…
*இன்றைய புதிர்!*( 14-05-20)
from
Vanchi's archive -2009(தென்றல்)*
*********************
சனி முதல் எதிர் வரும் வியாழன் இலை காய்ந்தது (3)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 14-05-20)
from
Vanchi's archive -2009(தென்றல்)*
*********************
சருகு(பெ)
காய்ந்த இலை
dried or withered leaf
*விளக்கம்*
ஒர் இலையின் ஏழாவது கடைசிப் பருவம். மற்ற ஆறு பருவங்கள் குருத்து, அரும்பு, 
துளிர், தளிர், இலை, பழுப்பு என்பதாகும்.
*********************
சனி முதல் எதிர் வரும் வியாழன் இலை காய்ந்தது (3)

சனி முதல் = ச
வியாழன் = குரு
எதிர் வரும் வியாழன்
= குரு --> ருகு
இலை காய்ந்தது
= ச+ருகு
= சருகு
*********************
காய்ந்து போனவன், காற்றில் உதிர்பவன், வலுவற்றவன், வாழ்விழந்தவன்,
உறுதியற்றவன்,
உயிர்கொடுக்கும் வேராய் இல்லையென்றாலும் உரமாகும் சருகாய் வாழ்கிறேன். 
*********************
சருகுக்கு மெருகு சேர்த்தவர்கள்.!!!

[5/14, 06:02] உஷா, கோவை: சருகு

[5/14, 06:02] nagarajan: சருகு

[5/14, 06:02] sathish: சருகு

[5/14, 06:03] akila sridharan: சருகு

[5/14, 06:07] Ramarao
விடை : சருகு

[5/14, 06:10] ராஜி ஹரிஹரன்: சருகு -

[5/14, 06:13] suba: Hello sir, சருகு

[5/14, 06:13] sridharan: சருகு

[5/14, 06:14] Viji kovai :
புதிர் விடை
சருகு
ச + ருகு (வியாழனின் எதிர்=ருகு)

[5/14, 06:18] balakrishnan: சருகு

[5/14, 06:24] மீ.கண்ணண்.: சருகு

[5/14, 06:30] usha: சருகு

[5/14, 06:31] A T வேதாந்தம்: விடை= சருகு
[
[5/14, 06:37] Meenkshi: விடை:சருகு

[5/14, 06:46] sankara subramaiam: சருகு

[5/14, 06:47] N T Nathan: சருகு

[5/14, 07:03] Ramki Krishnan: Charugu

[5/14, 07:06] prasath venugopal: சருகு

[5/14, 07:07] shanthi narayanan: சருகு

[5/14, 07:29] ஆர். நாராயணன்.: சருகு

[5/14, 07:57] பாலூ மீ.: இன்றைய புதிர் விடை சருகு.

[5/14, 08:44] Dhayanandan: சருகு

[5/14, 08:58] chithanandam: சருகு

[5/14, 09:55] senthil: சருகு

[5/14, 11:47] Bharathi: சருகு

[5/14, 11:48] Rajalakshmi Krishnan: Sarugu

[5/14, 15:48] siddhan submn: சருகு

[5/14, 19:13] Venkat UV: சருகு.

******************************
Raghavan MK said…
*********************
*இன்றைய புதிர்!*( 15-05-20)
from
Vanchi's archive -2009(தென்றல்)*
*********************
ஒரு பூவாசம் பங்கிட்டுக் கொள்ளலாம் (5)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 15-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************
*சம்பங்கி*  நீலக்கற்றாழையை ஒத்திருக்கும். இதன் சாறு நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன!

*சம்பங்கி* மலர் அணைத்து விதமான விழாக்கள் மற்றும் விசேஷங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த மலருக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு உள்ளது.
*********************
ஒரு பூவாசம் பங்கிட்டுக் கொள்ளலாம் (5)

விடை புதிருக்குள் மறைந்துள்ளது!

ஒரு பூவாசம்
= ஒரு பூ + வாசம்
வாசம் பங்கிட்டுக் கொள்ளலாம்
= [வா]சம்பங்கி[ட்டு]
= சம்பங்கி
= ஒரு பூ
********************
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
*படம்: முள்ளும் மலரும்*
********************
எந்த பூவிலும் வாசம் உண்டு 
நினைவு 
லலலலலல . 
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 
*படம் : முரட்டு காளை*
********************
வாசமுள்ள மலர் சம்பங்கியை பறித்தவர்கள்.

[5/15, 06:01] உஷா, கோவை: சம்பங்கி
[5/15, 06:01] N T Nathan: சம்பங்கி
[5/15, 06:04] Ramarao :
Sampangi சம்பங்கி
[5/15, 06:06] Dhayanandan: சம்பங்கி
[5/15, 06:14] balakrishnan: சம்பங்கி🤣
[5/15, 06:24] suba: Hello sir, சம்பங்கி
[5/15, 06:27] sathish: சம்பங்கி!
[5/15, 06:27] prasath venugopal: சம்பங்கி
[5/15, 06:35] பாலூ மீ.: ஒரு பூ (வா) சம்பங்கி.
[5/15, 06:37] Ramki Krishnan: Champangi
[5/15, 06:37] ஆர். நாராயணன்.: சம்பங்கி = ஒரு பூ
(container clue)
[5/15, 06:40] Meenkshi: இன்றையவிடை:சம்பங்கி.
[5/15, 06:43] மீ.கண்ணண்.: சம்பங்கி
[5/15, 06:52] sridharan: சம்பங்கி
[5/15, 06:54] akila sridharan: சம்பங்கி
[5/15, 07:26] nagarajan: சம்பங்கி
[5/15, 11:54] balagopal: சம்பங்கி.
[5/15, 12:15] siddhan submn: சம்பங்கி
[5/15, 13:36] Rajalakshmi Krishnan: Sampangi.
[5/15, 14:44] shanthi narayanan: சம்பங்கி

*********************
Raghavan MK said…
*********************
*இன்றைய புதிர்!*( 16-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************
அரசரும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சக்தியைத் திரட்டிப் பொதுவாகப் பார்க்கும் இடம் (5)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய புதிர்!*( 16-05-20)
from
Vanchi's archive-2009
(தென்றல்)
*********************
அம்பலம்

பொது மக்கள் கூடும் திறந்த வெளி சபை
மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல்
உண்மை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுதல்
********************
அரசரும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சக்தியைத் திரட்டிப் பொதுவாகப் பார்க்கும் இடம் (5)

அரசரும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை
= அ[ரசரு]ம் = அம் ( முதலும் கடைசியுமான எழுத்துகள்)
சக்தி = பலம்
சக்தியைத் திரட்டி = அம்+பலம்
= அம்பலம்
= பொதுவாகப் பார்க்கும் இடம்
*********************
ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன்நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப்புராணங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து தலங்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.

சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்

குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).

இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.
*********************
விடையை அம்பலத்தில் ஏற்றியவர்கள்!

[5/16, 06:02] nagarajan: அம்பலம்

[5/16, 06:06] உஷா, கோவை: அம்பலம்

[5/16, 06:07] Ramarao : அம்பலம்

[5/16, 06:17] balakrishnan: அம்பலம்🙏🏻

[5/16, 06:25] Dhayanandan: அம்பலம்

[5/16, 06:31] Suba: Hello sir, அம்பலம்

[5/16, 06:40] N T Nathan: அம்பலம்

[5/16, 06:45] மீ.கண்ணண்.: அம்பலம்

[5/16, 06:53] Meenkshi:
விடை:அம்பலம்

[5/16, 07:22] chithanandam: அம்பலம்

[5/16, 07:27] sathish: அம்பலம்

[5/16, 08:09] prasath venugopal: அம்பலம்

[5/16, 08:52] siddhan submn: அம்பலம் (அம் + பலம்)

[5/16, 13:45] Rajalakshmi Krishnan: Ambalam


[5/16, 16:23] balagopal: தென்றல் புதிர்.
அம்பரம்.
******************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்