Skip to main content

Posts

Showing posts from June, 2020

விடை 4093

இன்று காலை வெளியான வெடி: நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த  உயர்ந்த குணத்தினள் (4) அதற்கான விடை:  உத்தமி   = உமி +  (பி)த்த (ளை) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

உதிரிவெடி 4093

உதிரிவெடி 4093 (ஜூன் 28, 2020) வாஞ்சிநாதன் ********************** நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த  உயர்ந்த குணத்தினள் (4) Loading…

Solution to Krypton 229

Today's clue: Friend with  inverted  nose right inside  is about body appearance (8) Its solution:  PERSONAL = PAL + NOSE + R Please visit this page to see the answers sent for this clu.

விடை 4092

விடை 4092 இன்று காலை வெளியான வெடி: உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)  அதற்கான விடை:    காவியம் = காயம் (உடல்)  + வி (விற்பவளை என்பதன் முதலெழுத்து) மஹாகவி என்ற பட்டம் ஒரு காவியம் படைத்தவர்க்கே உரியது என்பது  மரபு.  அதனால்  கல்கி, பாரதியாரை, தேசிய கவிதான், மஹாகவி என்று அழைப்பது சரியில்லை என்று வாதிட்டார்.  அதைப் பற்றிய நூல் இதோ . பின்னர் பாரதியாருக்கு எட்டயபுரத்தில்  மணி மண்டபம் கட்டும் எண்ணத்தை ஆதரித்து,  திட்டமிட்டதற்கு மேலாக நிதி சேர்த்தவரும் கல்கியே  என்பதை இங்கே சுட்டப்பட்டுள்ள  தினமணி கட்டுரையில் காணலாம். இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4092

உதிரிவெடி 4092 (21/06/2020) வாஞ்சிநாதன் **************** உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)   Loading…

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) மற்றொரு புறம் அச்சொல் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டு  அக்குக்கும்

விடை 4091

இன்று காலை வெளியான வெடி: கேட்பதற்கு ஞானமில்லா கிராமத்து மக்கள் பரதன் நிராகரித்தது (6) அதற்கான விடை: அரியாசனம் = அரியா+சனம் [அரியா  --> கேட்பதற்கு அறியா போலிருக்கும்] இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 228

Today's clue: Plaintiff initially got up confusing court and the district attorney (10) Its solution: PROSECUTOR = P (plaintiff, initially)  + ROSE (got up)                                                 + CUTOR (confused court) Thanks to the kind comment by M K Raghavan. Currently  there is no plan to do make regular clues. Yesterday  I was watching an Italian legal drama in Netflix, and the word prosecutor kept coming. As the word split so naturally an idea for the clue emerged. Visit this page for the list of  solvers .

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 4090

உதிரிவெடி 4090  (ஜூன் 7 , 2020) வாஞ்சிநாதன் **********************   ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) Loading…