இன்று காலை வெளியான வெடி: மின்னல் இடையோடு காற்றில் மிதப்பது மகிழ்ச்சியான முகத்தில் தோன்றும் (4) அதற்கான விடை: புன்னகை = புகை + (மி)ன்ன(ல்) காற்றில் மிதப்பது புகை (சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எம்எஸ்வியே பாடிய பாடல் நினைவுக்கு வருகிறதா?) பழையபுதிர்கள் இங்கே வெளிவருவதில் புதிர் பற்றி கொஞ்சம் விளக்கம்: தமிழக அரசுக்கு முதல்மாதம் என்ற தை என்ற குறிப்பு எப்படி இக்காலத்துக்குப் பொருந்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் சிலர். விடைகளை இங்கே காணவும். மெட்ராஸ் என்ற ஒரு நகரின் பெயரை 1997இல் வேறு பெயருக்கு அரசாங்கத்தினர் மாற்றினார்கள். அந்த மாற்றம் சில நாட்களுக்கு என்று அறிவிக்கப்படவில்லை. அதே போல்தான், அரசினர் புத்தாண்டு சித்திரையிலிருந்து தை மாதம் என்று அறிவித்தது சில காலங்களுக்கு என்று யாரும் நினைக்கவில்லை. அதுபோல் இதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தோம், சரி நான் மட்டும் நினைத்தேன். ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகையின் பெயர் "குமாரி கமலா" என்று வரும். அவர் ஒரு நாள் கிழவியாகப் போகிறார் என்று தெரிந்தும் குமாரி கமலா என்று அவர்கள் எழுதியது எவ்வளவு பெரிய குற்றம்?